மதுரை - பெங்களூரு வெறும் 5:30 மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்! டிக்கெட் விலை இவ்வளவு தானா?

உலகத்தில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இதன்படி மதுரையிலிருந்து எந்த வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும், மற்றும் இந்த ரயிலில் உள்ள டிக்கெட் விலை என்ன? உள்ளிட்ட ஏராளமான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. இரு நகரங்கள் விரைவாக இணைக்கப்படுவதால் மக்கள் மத்தியில் இந்த வந்தே பாரத் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் விரைவாக பயணிக்க வேண்டும் என்பதால் இந்த ரயிலை தேர்வு செய்து அதில் டிக்கெட்களை புக் செய்து பயணம் செய்து வருகின்றனர்.

Madurai Bengaluru Vande Bharat

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னையிலிருந்து பெங்களூரு, சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக மதுரையிலிருந்து பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ரயிலை பிரதமர் மோடி நேரடியாக மதுரைக்கு வந்து துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் வரும் 11ம் தேதி அல்லது 13-ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வந்து இந்த ரயிலை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madurai Bengaluru Vande Bharat

மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் பொறுத்தவரை வழக்கமாக மற்ற வந்தே பாரத் ரயில் போல எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தான் இயக்கப்படுகிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே 435 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.

இந்த தூரத்தை இந்த ரயில் வெறும் 5 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து விடும் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல மற்ற வந்தே பாரத் ரயில் போல இதிலும் எக்ஸிக்யூடிவ் கிளாஸ், சேர் கிளாஸ் என இரண்டு ரக பெட்டிகள் உள்ளன.

Madurai Bengaluru Vande Bharat

மதுரையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ரயில் நிலையங்களில் எல்லாம் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் பட்சத்தில் அந்த மாவட்ட பயணிகளும் அதிகம் பயனடைய வாய்ப்புகள் உள்ளது.

இந்த மதுரை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விபரங்களை பொறுத்தவரை சாதாரண ஏசி சேர் காருக்கு ரூபாய் 1300, எக்ஸிகியூடிவ் சீட் காருக்கு ரூபாய் 2300 டிக்கெட் விலையாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் ரயில்வே வட்டாரத்தில் இருந்து இந்த தகவல்கள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை தமிழகத்திற்கு வந்து சென்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் இந்த ரயிலை துவக்கி வைப்பதற்காக மதுரைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்கான இதுவரை செய்திகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நிச்சயம் மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் இந்த மாதமே பயன்பாட்டிற்கு வரும்.

மதுரை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் ஐஆர்சிடிசி தளத்தில் இந்த ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்யும் ஆப்ஷன்கள் திறக்கப்படும். அதன் பின்னர் மக்கள் இந்த ரயிலில் டிக்கெட் விலை புக் செய்து பயணம் செய்து கொள்ள முடியும். இது பகல் நேர ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் வந்தே பாரத் ரயில் என்பது மிக முக்கியமான சேவையாக இருக்கிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த ரயில் சேவை இந்தியா முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் பயன்பாடு அதிகரித்து இந்திய மக்கள் சிறப்பான ரயில் சேவையை நோக்கி நகர துவங்கி உள்ளார்கள். இந்நிலையில் மதுரை-பெங்களூர் ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 17:14 [IST]
English summary
Madurai bengaluru vande bharat express coming soon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X