Madurai Metro வேலைகள் இவ்வளவு ஸ்பீடா? கொஞ்சம் விட்டா ரயிலே விட்டுருவாங்க போலயே!
கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தில் மதுரையில் மெட்ரோ ரயிலுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் இந்த திட்டத்தை அறிவித்தார். இதற்காக ரூ8500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்திற்கான இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் மெட்ரோ ரயில் குறித்த விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. குறிப்பாக மதுரை திருமங்கலத்திலிருந்து ஒத்தகடை வரை முதற்கட்ட மெட்ரோ ரயில் பாதையை கட்டமைக்கும் பணி துவங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் 2024ம் ஆண்டு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகளை துவங்கும் முன் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது உள்ளது. முதலில் மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் எவ்வளவு அடி ஆழத்தில் என்ன விதமான மண் இருக்கிறது என தெரிந்தால் தான் பின்னர் அந்த இடத்தில் மெட்ரோவிற்கான பில்லர்கள் அமைக்கும் போது பிரச்சனையில்லாமல் இருக்கும்படி திட்டமிட முடியும். இதற்காக தற்போது மண் பரிசோதனை துவங்கிவிட்டது.
மதுரை மெட்ரோ நிர்வாகம் சார்பில் இந்த பணி துவங்கிவிட்டது. மெட்ரோவிற்கான அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே மண் பரிசோதனை வரை நடக்க துவங்கிவிட்டது. மெட்ரோ வேலைகளை படுவேகமாக நடந்து வருகிறது. இது குறித்து மதுரை மெட்ரோவின் திட்ட இயக்குநர் கூறும் போது : "இந்த மண் பரிசோதனை 3-4 இடங்களில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு செக்மெண்டிலும் 2 இடத்திலாவது இதை நடத்த வேண்டும்.
இந்த மண் பரிசோதனையின் முடிவுகளை வைத்தே ஸ்டெக்சரல் இன்ஜினிரியங் வடிவமைப்பை முடிவு செய்யும். மண் எவ்வளவு கடினமாக இருக்கிறது. அல்லது சாஃப்டாக இருக்கிறது என்பதை வைத்து தான் இதன் வடிவமைப்பு முடிவு செய்ய முடியும். இதன் பின்பு தான் இந்த திட்டத்திற்கான முழு வரைபடமும் நமக்கு கிடைக்கும். " என கூறினார்.
தற்போது மதுரை மெட்ரோ திருமங்கலத்திலிருந்து ஒத்தகடை வரை மொத்தம் 31 கி.மீ தூரத்திற்கு கட்டமைக்கப்படவுள்ளது. அதில் வசந்தநகரிலிருந்து கோரிபாளையம் வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கு காரணம், மதுரையில் பல பழமையான தொன்மையான கட்டிடங்கள் இருக்கிறது. இது எல்லாம் எலிவேட்டட் பாதை அமைந்தால் இடிக்கப்படும்.

இவை இடிக்கப்படாமல் மெட்ரோ ரயிலை கட்டுவது கடினம். இதனால், பூமிக்கடியில் பாதை அமைப்பது சுலபமானது. ஆனால் செலவை பொருத்தவரை பூமிக்கடியில் பாதை அமைப்பது, எலிவேட்டட் பாதையைவிட அதிகமானது. இருந்தாலும், மதுரையின் பழமை அழகை கெடுக்காத வண்ணம் இதன் வடிவமைப்பு வரவேண்டும் என்பதற்காக பூமிக்கு அடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 5 கி.மீ பூமிக்கு அடியிலும் 26 கி.மீ எலிவேட்டட் பாதையாகவும் கட்டமைக்கப்படவுள்ளனர்.
இந்தியாவில் மெட்ரோ ரயிலில் சராசரி வேகம் 40-50 கி.மீ தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடப்பது தான். அப்படி என்றால் மதுரை மெட்ரோ முதற்கட்ட பணிகள் மொத்தமே 31 கி.மீ தான் என்பதால் இந்த மெட்ரோ பயன்பாட்டிற்கு வரும் போது திருமங்கலம் - ஒத்தகடை இடையே வெறும் பயண நேரம் 40-45 நிமிடமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மதுரை மெட்ரோ ரயிலுக்கான பணியை பார்த்தால் படு வேகமாக நடப்பதாகவே தெரிகிறது. தொடர்ந்து இதே வேகத்தில் நடந்தால் இன்னும் 4-5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் மதுரையில் இயங்குவதை நம்மால் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








