விமான நிலையத்தை தோற்கடிக்க போகும் மதுரை ரயில் நிலையம்... வெளிநாடுகள் எல்லாம் கை கட்டிதான் நிக்கணும்!

மத்திய ரயில்வே துறை தற்போது இந்தியா முழுவதும் ஒவ்வொரு ரயில் நிலையங்களையும் மேம்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களை மாற்றி அதை மக்கள் சுலபமாகவும், எளிமையாகவும் பயன்படுத்தும் படியும், பல நவீன வசதிகளை உட்புகுத்தியும், ஏராளமான பயணிகள் பயன்படுத்தும் வகையிலும் மாற்றி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மதுரை ரயில் நிலையம் புதிய வசதிகளுடன் குட்டி விமான நிலையம் போல மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பே மதுரை வழியாகச் செல்லும் பல்வேறு ரயில்கள் பாதை மாற்றி விடப்பட்டுள்ளன. மதுரை வரை மட்டுமே செல்லும் ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமான நிலையத்தை தோற்கடிக்க போகும் மதுரை ரயில் நிலையம்... வெளிநாடுகள் எல்லாம் கை கட்டிதான் நிக்கணும்!

இதற்காக தேதியுள்ளிட்ட கால அட்டவணை விபரங்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. அதன்படியே தற்போது ரயில்கள் எல்லாம் மாற்றிவிடப்பட்டுள்ளனர். தற்போது மதுரை ரயில் நிலையத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ரயில்வே துறை ரூ430 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் மதுரை ரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக டூரிஸ்ட்கள், ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்களுக்கு மதுரை ரயில் நிலையம் ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது. இங்கு தற்போது தினமும் 96 ரயில்கள் வருகின்றன அதில் 51,296 பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மதுரை ரயில் நிலையத்தை ஒரு குட்டி விமானம் நிலையம் போல மாற்ற ஏற்பாடு நடக்கிறது. முக்கியமான விமானங்களில் இருப்பது போல ரயில் நிலையத்திற்கு வருபவர்களுக்கு ஒரு வழி ரயில் நிலையிலிருந்து வெளியே வருபவர்களுக்கு ஒரு வழி எனப் பிரிக்கப்படவுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க முடியும் என்பதால் இதைச் செய்துள்ளது.

இது மட்டுமல்ல ரயில் நிலையத்திற்குள் பஸ், கார், டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்டவை வந்து ஏற்ற ஏற்ற தனித்தனி இட வசதிகள் உருவாக்கப்படுகிறது. அதனால் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் மக்கள் அவர்கள் விரும்பும் வாகனங்களில் செல்லமுடியும். மதுரை ரயில் நிலையத்தில் 2 டெர்மினல்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. கிழக்குவாசல் மற்றும் மேற்கு வாசல் பகுதியில் இது இடம் பெறும்.

மேலும் இரண்டு பகுதியிலும் 3 மல்டிலெவல் பார்க்கிங் பில்டிங்களும் கட்டமைக்கப்படவுள்ளன. கிழக்கு வாசல் பகுதியில் 2 பில்டிங்கும், மேற்கு வாசல் பகுதியில் ஒரு பில்டிங்கும் கட்டமைக்கப்படவிரு்கிறறது. இது போக ரயில்வே பிளாட்பாரத்திலிருந்து, பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு ஒரு சப்வே ஒன்றும் கட்டமைக்கப்படவுள்ளது. பார்சலுக்கான பிரத்தியேக ஃபிளை ஓவர் பிரிட்ஜ், மற்றும் பார்க்கிங்கிலிருந்த நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்லும் வசதி ஆகியன ஏற்படுத்தப்படவுள்ளன.

கிழக்கு டெர்மினல்

கிழக்கு டெர்மினில் மொத்தம் 22576 சதுரடியில் தரைத்தளம் போக 2 தளங்களைக் கட்டவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. முகப்பு பகுதி மதுரையின் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. தரைதளத்தில் மக்கள் பயன்படுத்த உலகத்தரத்திலான வசதிகள் ஏற்படப்படவுள்ளன. முக்கியமாகக் கழிவறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பாலூட்டும் அறை, உதவி மையம், கடைகள்,ஆகியன இடம் பெறவுள்ளன.

முதல்தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, உணவகம் மற்றும் சில கமர்ஷில் கடைகளும் இடம்பெறவுள்ளன. இரண்டாவது தளத்தில் கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் முதல் தளத்திலிருந்து நேரடியாக ஃபிளை ஓவர் பிரிட்ஜ் மூலம் எந்த பிளாட்பாரத்திற்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்ற அளவில் இணைக்கப்படுகிறது.

இதற்காக 2 ஜோடி எஸ்கலேட்டர்கள், 2 லிஃப்ட்கள், 4 படிகட்டுகள் உருவாக்கப்படவுள்ளன. இரண்டு டெர்மினல் அமைக்கப்படும் நிலையில் இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பாலமும் அமைக்கப்படுகிறது. மேலும் முதல் தளத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளால் சுலபமாக பிளாட்பாரங்களில் வரும் ரயில்களைப் பார்க்க முடி
யும்படி கண்ணாடிகள் பொருத்தப்படவுள்ளன.

மேற்குவாசல்

ஏற்கனவே மேற்கு வாசலில் உள்ள பில்டிங் புதுப்பிக்கப்பட்டு உலகத் தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளது. இந்த வாசலில் வெளியே வருவதற்கும், உள்ளே செல்வதற்கும் தனித்தனியான வழிகள், ரயில்வே அதிகாரிகளுக்கான அலுவலகங்கள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் பிற பயணிகள் வசதிகள் எல்லாம் ஏற்படுத்தப்படவுள்ளன.

மல்டிலெவல் பார்க்கிங் பில்டிங்

கிழக்கு பகுதியில் 2 மல்டிலெவல் பார்க்கிங் பில்டிங் அமைக்கப்படவுள்ளது. முதல் பில்டிங் கார்களுக்கான பார்க்கிங் பில்டில் இது சுமார் 9430 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் போக 2 தளங்களாக அமைக்கப்படவுள்ளது. இரண்டாவதாக டூவீலர்களுக்காக பார்க்கிங் பில்டிங் 2822 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம்போ 3 தளங்களாக அமைக்கப்படவுள்ளன.

மேற்கு வாசலைப் பொருத்தவரை ஒரு பார்க்கிங் பில்டிங் அமைக்கப்படவுள்ளது. இது கார்களுக்கான பார்க்கிங் பில்டிங், இங்குத் தரை தளம்போக 1 தளம் அமைக்கப்படவுள்ளது. இது மொத்தம் 2580 சதுர மீட்டராகும். இது போக நாம் முன்னரே சொன்னது படி மதுரை ரயில் நிலையம் மற்றும் பெரியார் பஸ் ஸ்டாண்டை இணைக்கும்படி ஒரு சப்-வே அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க முடியும் என்பதால் இதைத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பணிகள் முடிவு இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கலாம். தற்போது பிளாட்பாரங்களை உலகத் தரமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் மதுரை ரயில் நிலையம் ஒரு வெளிநாட்டு விமான நிலையம் போன்ற ஒரு ஃபீலை வழங்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Thursday, February 23, 2023, 9:20 [IST]
English summary
Madurai railway station redevolpment work started know details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+