லாஜிக்கே இல்லாத கட்டுக் கதை இது! ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை அள்ள எல்லாம் பயன்படுத்தவேயில்லை! உண்மை என்ன?

ரோல்ஸ்ராய்ஸ் காரை இந்திய மன்னர் ஒருவர் வாங்கி அதை தன் ஊரில் குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்தியதாகச் சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி நீண்ட நாட்களாக வைரலாகி வருகிறது இது உண்மையா?

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார் உலகின் விலை உயர்ந்த சொகுசு கார்களில் ஒன்று இந்த காரில் பல பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது. பல பிரபலங்கள், செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள் இந்த காரை சொந்தமாக வாங்கியுள்ளனர்.

லாஜிக்கே இல்லாத கட்டுக் கதை இது! ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை அள்ள எல்லாம் பயன்படுத்தவேயில்லை! உண்மை என்ன?

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் மகாராஜா ஜெய்சிங் என்பவர் தன் நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அதைக் குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்தினார் என்ற கதைகள் சில வைரலாக பரவி வருகிறது. ஏன் ரோல்ஸ் ராய்ஸ் காரின் காரின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் விளக்குமாற்றைக் கட்டி சாலையைச் சுத்தம் செய்து கொண்டே செல்லும் படியான புகைப்படங்கள் கூட சமூகவலைத்தளங்களில் ஆங்காங்க பரவிக் கொண்டிருக்கிறது. இது எல்லாம் உண்மை தானா?

சமூகவலைத்தளங்களில் வெளியாகும் இந்த கதைக்குப் பல வெர்ஷன்கள் உள்ளன. அதில் முக்கியமானது பின்வரும் கதை தான். மகாராஜா ஜெய் சிங் ஒரு முறை லண்டன் சென்றிருந்தார். அங்கு அவர் இந்திய ஆடையை உடுத்தியபடி அங்குள்ள கடை விதிக்குச் சென்றிருந்தார். அங்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஷோரூம் ஒன்று இருந்துள்ளது. அந்த காரை பற்றித் தெரிந்து கொள்வதற்காக அந்த ஷோரூம் உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் ஷோரூம் ஊழியர்கள் அவரை உள்ளே விடவில்லை.

மன்னர் இந்திய ஆடையை அணிந்திருந்ததே அதற்குக் காரணம். அவரை ஏதோ பிச்சைக்காரன் கார் ஷோரூம் உள்ளே நுழைய பார்க்கிறான் என ஊழியர்கள் அவரை துரத்திவட்டனர். பின்னர் அவர் மன்னர் ஆடையில் வந்து அதே ஷோரூமில் 6 கார்களைவாங்கி அதை இந்தியாவிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தியாவில் அந்த காரை அவர் பயன்படுத்தாமல் அதைச் சாலையில் குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்தியுள்ளார். இதனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டிஷ் நாட்டிலேயே பலர் ரோல்ஸ்ராய்ஸ் காரை வைத்திருப்பவர்களைப் பார்த்து குப்பை அள்ளும் வண்டியை வைத்திருக்கிறார். இந்தியாவில் அதைக்குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள் எனக் கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். பின்னர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டபின்பு அவர்க் குப்பை அள்ளும் வண்டியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்தினார் என்று இந்த கதையிருக்கிறது. இந்த கதை எந்த அளவிற்கு உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை இனி காணலாம்

இந்த கதையில் சொல்லப்படும் மகாராஜா ஜெய் சிங் என்பவரின் முழு பெயர் சாவாய் ஜெய் சிங் இவர் இரண்டாம் ஜெய்சிங் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1688ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பிறந்து 1743ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி இறந்துவிட்டார். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஆண்டை தான். இவர் 1743ம் ஆண்டே இறந்துவிட்டார். ஆனால் 1885ம் ஆண்டு தான் கார்ல் பென்ஸ் காரை முதன்முதலாக வடிவமைத்தார். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமே 1906ம்ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

அதனால் மகாராஜா ஜெய் சிங் இறந்த பிறகு தான் ரோல்ஸ் ராய் நிறுவனமே துவங்கப்பட்டுள்ளதால் இந்த கதை உண்மையாக இருக்கச் சாத்தியமாக இல்லை. மற்ற வெர்ஷன் கதைகளிலும் இது போலக் காலம் சிக்கல் இருக்கிறது. சிலர் ஐதராபாத் நிஜாம் ஒருவர் இதைச் செய்ததாகவும், சிலர் பரத்பூர் மகாராஜா கிஷான் சிங் செய்ததாகவும் சிலர் பாட்டியாலா மகாராஜா செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே கிடையாது.

சரி அப்பொழுது காரின் முன்னாள் துடைப்பத்தைக் கட்டி ரோட்டை கூட்டிக்கொண்டே செல்வது போலப் புகைப்படங்கள் எல்லாம் இருக்கிறதே அது எல்லாம் பொய்யா என நீங்கள் நினைக்கலாம். அது எல்லாம் உண்மை தான். ஆனால் அது சாலையைச் சுத்தம் செய்வதற்காகப் பொருத்தப்பட்டது அல்லது. ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியா வரும் போது இந்தியாவில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தது. கற்கள் எல்லாம் அதிகமாக இருந்ததால் காரின் டயரில் அது குத்தி டயரை பஞ்சராக்கும் வாய்ப்பு இருந்தது.

இதனால் டயரை இப்படியாகக் கற்களிலிருந்து பாதுகாக்க காரின் டயரின் முன்னாள் துடைப்பத்தைக் கட்டினர். இதனால் டயர் பாதுகாப்பாக இருக்கும். அந்த காலத்தில் டயர் சேதமாகிவிட்டால் அதைமாற்றுவதற்கு அதிகம் செலவாகும். மேலும் அதை உள்ளூரில் எல்லாம் மாற்ற முடியாது. அதை மாற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திலிருந்து தான் ஆள் வரவேண்டும் என்பதால் அதைப் பாதுகாக்கத் தேவையான எல்லாவற்றையும் செய்தனர். இந்த புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மற்றபடி ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியாவில் குப்பை அள்ளும் வாகனமாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படும் கதைகள் எல்லாம் முற்றிலும் புரளி தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharaja Jai Singhs story of rolls Royce garbage collection is not true
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X