ரூ.100கோடி வசூல்.. மகாராஜா இயக்குநருக்கு காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்! நிதிலனுக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு!

நடிகர் விஜய் சேதுபதி-இன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மகாராஜா. இது அவரின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். மிகப் பெரிய ஹிட் கொடுத்த படமாக நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த படம் மாறி உள்ளது. திரையரங்குகள் வாயிலாக மட்டுமே இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதுதவிர, ஆன்லைன் ஓடிடி தளங்கள் வாயிலாகவும் இந்த திரைப்படம் வசூல் சாதனையைப் படைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த பிளாக் பஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கு தயாரிப்பு நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர காரை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW)-வின் விலை உயர்ந்த தயாரிப்பே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

Nithilan swaminathan receives bmw gift

எந்த கார் மாடல் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், படங்களை வைத்து பார்க்கையில் அது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல் பேஸ் (BMW 5 Series Long Wheelbase) கார் மாடல் என்பது தெரிகின்றது.

இது ஓர் செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 72.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Nithilan swaminathan receives car gift from producer

530எல்ஐ எம் ஸ்போர்ட் - டைட்டானியம் ப்ரோன்ஸே (530Li M Sport Titanium Bronze) மற்றும் 530எல்ஐ எம் ஸ்போர்ட் அலுமினியம் சேடினேட்டட் (530Li M Sport Aluminium Satinated) ஆகியவையே அவை ஆகும். மிகவும் கவர்ச்சியான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய ஓர் ஆடம்பர கார் மாடலே 5 சீரிஸ் செடான் ஆகும்.

இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக இலுமினேட் கிட்னி கிரில், எம் ஸ்போர்ட் எக்ஸ்டீரியர், அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட், 19 அங்குல எம் அலாய் வீல்கள் மற்றும் அலுமினிய அணிகலன்கள் உள்ளிட்டவையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதேபோல், அதிநவீன அம்சங்களையும் இந்த காரில் பிஎம்டபிள்யூ மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், டிரைவிங் அசிஸ்டன்ட், பார்க்கிங் அசிஸ்டன், முன் பக்கத்தில் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, கார் இணைப்பு அம்சம், டிஜிட்டல் சாவி, பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் பிளஸ் உள்ளிட்டவை 5 சீரிஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, கியர் ஷிஃப்டர் இருக்கும் இடம் கிளாஸால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இது அக்காருக்கு பிரீமியம் அம்சத்தை மிக தாராளமாக வழங்கும் வகையில் இருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட், டூயல் டோன்கள் கொண்ட இருக்கை மற்றும் மர பேனல்கள் உள்ளிட்டவற்றை இதன் உட்பக்கத்தில் பார்க்க முடியும். எனவே பிரீமியமான டிராவல் அனுபவம் இந்த காரில் கிடைப்பது உறுதி.

மேலும், சிறந்த மற்றும் சௌகரியமான ரைடு அனுபவத்திற்காக பின்னிருக்கையாளர்களுக்கு கூடுதல் லெக்ரூம், 4 ஜோன்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் போவர்ஸ் - வில்கின்ஸ் சரவுண்டு சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களையும் இந்த கார் தாங்கியிருக்கும். இத்தகைய ஓர் ஆடம்பர காரையே தற்போது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரை மகாராஜா இயக்குநருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுகு கார்களை பரிசாக வழங்கும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஜெயிலர் பட வெற்றியின்போதும் கூட இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு தயாரிப்பு நிறுவனம் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கின என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 13:44 [IST]
English summary
Maharaja movie director nithilan swaminathan receives bmw gift
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+