குடும்பத்துடன் ஷோரூமுக்கு போகாம துணி கடைக்கு வந்தது இதுக்குதானா? பென்ஸ் கார் உடன் நிற்பவர் யாரென்று தெரியுமா?
மெர்சிடிஸ் (Mercedes) கார்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. நம் இந்தியாவிலும் தான். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நம்பர் ஒன் நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் செல்வந்தர்கள் பலர் மெர்சிடிஸ் கார்களை விரும்பி வாங்குகின்றனர். அந்த வரிசையில், தற்போது பிரபல ஜவுளி கடை ஓனர் ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்கும் பழக்கம் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் பல காலமாகவே உள்ளது. அதுவும், ஜவுளி கடை உரிமையாளர் என்றால் சொல்லவே வேண்டாம். தினந்தோறும் புதிய துணிகளை பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு புத்தம் புதிய கார்களை வாங்குவது சகஜமாக உள்ளது.

அந்த வகையில் தற்போது பிரபல ஐவுளி கடை உரிமையாளர் ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ (GLE) என்கிற லக்சரி தரத்திலான எஸ்யூவி காரை வாங்கி உள்ளார். இந்த ஜவுளி கடை உரிமையாளரின் பெயர், திரு.ரியாஸ். கேரளாவின் பிரபலமான ஜவுளி கடைகளுள் ஒன்றான 'மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ்' (Maharani Wedding Collections)இன் நிர்வாக இயக்குனராக ரியாஸ் உள்ளார்.
மேலும், மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ் கடை உள்ளடங்கிய மொத்த 'அட்லாஸ் மஹாராணி க்ரூப்' (Atlas Maharani Group)இன் தலைவராகவும் ரியாஸ் உள்ளார். பெயருக்கேற்ப முழுக்க முழுக்க திருமணத்திற்கான ஆடைகளை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்கும் மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ் கடை ஆனது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா என்கிற பகுதியில் செயல்படுகிறது.

இந்த பகுதியில் உள்ள மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ் கடையின் வளாகத்திற்குள் உரிமையாளர் ரியாஸின் பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெர்சிடிஸ் ஷோரூமில் இருந்து மிக பெரும் லாரி (Lorry) ஒன்றில் ரியாஸின் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ கார் மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ் கடைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முற்றிலும் கருப்பு நிறத்திலான லாரியில் கொண்டுவரப்பட்ட முற்றிலும் கருப்பு நிறத்திலான ஜிஎல்இ காரை டெலிவிரி பெறுவதற்காக, அட்லாஸ் மஹாராணி க்ரூப்பின் தலைவர் ரியாஸ் தனது குடும்பத்துடன் துணி கடைக்கு வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ் காரில் வந்து இறங்குவதை வீடியோவில் காண முடிகிறது.
மஹாராணி வெட்டிங் கலெக்ஷன்ஸ் கடையின் வளாகத்திற்குள் பிராண்ட்-நியூ ஜிஎல்இ கார் ரியாஸின் குடும்பத்தாருக்கு டெலிவிரி செய்யப்படுவதை ஒரு சிறிய நிகழ்ச்சி போல் நடத்தி உள்ளனர். தொழிலதிபர் ரியாஸ் புதியதாக வாங்கியிருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரின் கருப்பு நிறத்தை 'அப்சிடியன் பிளாக் மெட்டாலிக்' (Obsidian Black Metallic) என மெர்சிடிஸ் நிறுவனம் அழைக்கிறது.
இது இல்லாமல், சோடாலைட் ப்ளூ மெட்டாலிக், செலினைட் கிரே மெட்டாலிக், ஹை-டெக் சில்வர் மெட்டாலிக் மற்றும் போலார் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் ஜிஎல்இ கார் விற்பனைக்கு கிடைக்கிறது. டீசல் மற்றும் ஹைப்ரீட் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இந்த பென்ஸ் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், டீசல் என்ஜின் உடன் 300டி ஏஎம்ஜி லைன் மற்றும் 450டி 4மேட்டிக் லாங்-வீல்பேஸ் என்கிற வேரியண்ட்களில் ஜிஎல்இ கார் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.99 லட்சம் மற்றும் ரூ.1.17 கோடி ஆகும். ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனில் 450 4மேட்டிக் லாங்-வீல்பேஸ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த பென்ஸ் கார் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.12 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ ஆனது மிகவும் தரமான பென்ஸ் கார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் அப்டேட் செய்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது. இருப்பினும், இந்த கார் இப்போது பார்க்கவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்; ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications








