கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா வைரஸால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே செய்த காரியம், சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொத்து கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருவதுடன், பொருளாதார ரீதியில் மிக கடுமையான பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொதுமக்கள் பலர் வேலையிழந்துள்ளனர். இன்னும் பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, வருவாய் இழப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

எனவே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய காரை வாங்கும் திட்டத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார். இதேபோல் மஹாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும், புதிய கார் வாங்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார்.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

குடியரசு தலைவர் மற்றும் மஹாராஷ்டிரா மாநில கவர்னர் ஆகியோரின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், மஹாராஷ்டிரா மாநில அரசு எடுத்துள்ள ஒரு முடிவு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் மஹாராஷ்டிராதான்.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

அம்மாநில தலைநகர் மும்பை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மஹாராஷ்டிரா அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இப்படி ஒரு இக்கட்டான சூழல் நிலவி வரும் சமயத்தில், நான்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, ஆறு புதிய கார்களை வாங்குவதற்கு மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் 1.37 கோடி ரூபாய் ஆகும். மஹாராஷ்டிரா மாநில அரசு வாங்க முடிவு செய்திருக்கும் ஆறு கார்களுமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான்.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்திய அரசியல்வாதிகள் விரும்பி பயன்படுத்தும் கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, சௌகரியமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த காராக இருப்பதே இதற்கு காரணம். மஹாராஷ்டிரா மாநில அரசு வாங்க முடிவெடுத்திருக்கும் ஒரு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை 22.83 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், துணை அமைச்சர் பாச்சு காடு, விளையாட்டு துறை அமைச்சர் சுனில் கேதார், துணை அமைச்சர் அதிதி தட்கரே ஆகிய நான்கு பேருக்கும் தலா ஒரு கார் வழங்கப்படவுள்ளது. இதுதவிர பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலாளரின் பயன்பாட்டிற்கு ஒரு கார் வழங்கப்படவுள்ளது.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதே சமயம் 6வது கார் அந்த துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய கார்களை வாங்குவதற்காக சிறப்பு அனுமதி கொடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

குறிப்பாக முக்கிய எதிர்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போதைய இக்கட்டான சூழலில், அமைச்சர்களுக்கு வாகனங்களை வாங்குவது, அரசின் முன்னுரிமையாக எப்படி இருக்க முடியும்?

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கோவிட்-19 வைரஸ் உண்டாக்கிய நெருக்கடி காரணமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, சம்பளத்தை ஒத்தி வைத்து வருவதாக கூறப்படும் சமயத்தில், வாகனங்களை வாங்குவது என்பது அரசின் முன்னுரிமையாக இருக்க முடியாது'' என்றார். இந்த விவகாரம் தற்போது மஹாராஷ்டிரா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

உண்மையில் புதிய வாகனங்களை வாங்கும் முடிவை பொதுமக்கள் ஏராளமானோர் தற்போது தள்ளி போட்டு வருகின்றனர். வேலையிழப்பு மற்றும் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதலீடுகளில் மக்கள் கவனமாக இருக்கின்றனர். இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது.

கொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

ஆனால் வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது என மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இந்த கொரோனா அச்சம் காரணமாக வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Approves Purchase Of 6 Innova Crysta MPVs For Ministers Amid COVID-19 Economic Crisis. Read in Tamil
Story first published: Monday, July 6, 2020, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X