மாநில துணை முதலமைச்சர் என்பதையே கொஞ்ச நேரத்துக்கு மறந்துட்டார்! டெஸ்லா காரை ஓட்டி பார்க்கும் ஆசை யாரை விட்டதோ!

டெஸ்லா (Tesla) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, டெஸ்லா எலக்ட்ரிக் காரை எப்போ ஓட்டி பார்ப்போம் என்று செல்வந்தர்கள் பலருக்கு இப்போதே ஆர்வம் அடக்கம் முடியாமல் இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காரான மாடல் ஒய் (Model Y)-க்கு முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டுள்ளன.

காரை வாங்குபவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு கூட டெஸ்லா ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும், ரூ.60 லட்சத்தில் மாடல் ஒய் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த விலையில் பணக்காரர்களால் மட்டுமே இந்த எலக்ட்ரிக் காரை வாங்க முடியும். மாடல் ஒய் காருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டு இருப்பினும், புக் செய்தவர்களுக்கு காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

eknath shinde drove tesla model y

ஆதலால், டெஸ்லா மாடல் ஒய் காரை சாலைகளில் காண்பதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். இதற்கு இடையில் நிறைய பேர் மும்பையில் திறக்கப்பட்டுள்ள டெஸ்லாவின் முதல் இந்திய டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்க்கலாம். ஆனால், இந்தியாவிலேயே முதல் ஆளாக மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை சாலையில் ஓட்டி பார்த்த பெருமை மஹாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவையே (Eknath Shinde) சேரும்.

ஜூலை 15ஆம் தேதி மும்பையின் பந்த்ரா (Bandra) பகுதியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டு, மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட பின், வெள்ளை நிறத்திலான மாடல் ஒய் கார் ஒன்றை டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஓட்டி பார்த்துள்ளார். அதிக தூரத்திற்கு எல்லாம் அவர் காரை ஓட்டி பார்க்கவில்லை; குறுகிய தூரத்திற்கு ஓட்டிவிட்டு, பின்னர் காரை ஷோரூமிலேயே கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.

eknath shinde drove tesla model y

டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை எவ்வாறு ஓட்டுவது என்பதை டெஸ்லா ஷோரூம் அதிகாரிகள் காருக்குள் அமர்ந்துக் கொண்டு ஏக்நாத் ஷிண்டேவுக்கு உதவினர். பந்த்ராவில் டெஸ்லா ஷோரூம் திறப்பு நிகழ்ச்சி ஆனது மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் (Davendra Fadnavis) முன்னிலையில் நடைபெற்றது.

ஷோரூமை திறந்து வைத்த பின், ஷோரூமுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாடல் ஒய் காரினுள் தேவேந்திர பட்னவீஸ் அமர்ந்து பார்த்து, புகைப்படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டார். ஆனால், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாடல் ஒய் காரை ஓட்டியே பார்த்துள்ளார். டெஸ்லா மாடல் ஒய் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஒய் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) கார் ஆகும்.

முன்பக்கத்தில் மெல்லியதான எல்இடி ஹெட்லைட்கள், பின்பக்கத்தில் கனெக்டட் எல்இடி டெயில்லைட்கள் உடன் மிகவும் எளிமையான தோற்றத்தில் உருவாக்கப்படும் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் நீளம் 4797மிமீ, அகலம் 1982மிமீ, உயரம் 1624மிமீ ஆகும். தரையில் இருந்து 167மிமீ உயரத்தில் காரின் அடிப்பகுதி அமைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழைவதற்கு முன்னரே இந்தியாவில் உள்ள சில பணக்காரர்கள் டெஸ்லா கார்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து பயன்படுத்த ஆரம்பித்தனர். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் நுழைந்த பின்னர் அதன் காரை அறிமுகம் செய்த நாளிலேயே ஓட்டி பார்த்த பெருமை மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவையே சேரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 16:09 [IST]
English summary
Maharashtra deputy cm eknath shinde drove tesla model y electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+