சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

காரில் ஃபேன்ஸி நம்பர் பிளேட் பயன்படுத்தியதற்காக முக்கிய பிரமுகர் ஒருவர் மீது காவல் துறையினர் துணிச்சலாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

இந்தியாவில் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நம்பர் பிளேட்டில் உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் எளிதாக படிக்க கூடிய வகையில், தெளிவாக இருக்க வேண்டும். ஃபேன்ஸி எழுத்துக்கள், பெயர் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றுக்கு நம்பர் பிளேட்டில் அனுமதி கிடையாது.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இதனை பின்பற்றுவது கிடையாது. ஒரு சில வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்களை ஃபேன்ஸியாக டிசைன் செய்து கொள்கின்றனர். அத்துடன் அரசியல் கட்சி தலைவர், சினிமா நடிகர்கள் ஆகியோரின் புகைப்படங்களையும் நம்பர் பிளேட்களில் இடம்பெற செய்கின்றனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

விதிமுறைப்படி இது தவறு என்பதால், அத்தகைய வாகன உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது துணை மேயர் ஒருவரே, காவல் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார். டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரை ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுடன் இயக்கியதற்காக காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

அதுவும் ஒரே வாரத்தில் 2 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகர் மாநகராட்சியின் துணை மேயரான பலேராவ்தான் தற்போது காவல் துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பவர். பலேராவ் தனது காரின் '4141' என்ற எண்ணை, மராத்தியில் 'தாதா' என்னும் வார்த்தையை போல் மாற்றியிருந்தார்.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

விதிமுறைப்படி இது தவறு என்பதால், பலேராவ் காரின் பேன்ஸி நம்பர் பிளேட்டை போக்குவரத்து காவல் துறையினர் கடந்த நவம்பர் 5ம் தேதி அகற்றியுள்ளனர். அத்துடன் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பாகதான் இதே தவறுக்காக பலேராவிற்கு காவல் துறையினர் அபராதம் விதித்திருந்ததாக கூறப்படுகிறது.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

ஆனால் அதற்கு பிறகும் அவர் தொடர்ந்து ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை பயன்படுத்தினார். இது குறித்து சமூக சேவகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், இறுதியாக பலேராவ் காரின் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை போக்குவரத்து காவல் துறையினர் அகற்றியுள்ளனர். அரசியல்வாதிகள் பலரின் கார்களில் இதுபோன்ற ஃபேன்ஸி நம்பர் பிளேட்களை பார்க்க முடிகிறது.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

ஆனால் காவல் துறையினர் எளிதாக சமாளித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில், துணை மேயர் என்ற போதும் துணிச்சலாக நடவடிக்கை எடுத்த உல்ஹாஸ்நகர் காவல் துறையினரின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டதக்கது. நம்பர் பிளேட்களில் விதிமீறல்களை செய்பவர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்.

சூப்பர்... ஒரே வாரத்தில் 2 முறை அபராதம்... போலீஸ் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது யார் மீது தெரியுமா?

கடந்த காலங்களில் பல்வேறு மாநிலங்களின் காவல் துறையினர் ஃபேன்ஸி நம்பர் பிளேட்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். சில சமயங்களில் வாகனங்கள் பறிமுதல் கூட செய்யப்பட்டுள்ளன. பெரு நகரங்களில் ஃபேன்ஸி நம்பர் பிளேட்களுக்கு எதிராக காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், சிறு நகரங்களில் காவல் துறையினர் இந்த விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra: Deputy Mayor Fined 2 Times In A Week For Using Fancy Number Plate. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X