மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

டாக்டர் ஒருவர் தன் மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளார். இதற்கான காரணத்தை கேட்டு உறவினர்கள் வாயை பிளந்தனர்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

இன்றைய சூழலில் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெற தொடங்கியுள்ளன. ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும் விஷயமாக திருமணங்கள் பார்க்கப்படுகின்றன. எனவே பல கோடி ரூபாயை கொட்டி, மிக ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர். அத்துடன் திருமண நிகழ்ச்சிகளில், தற்போதைய நவ நாகரீக சூழலுக்கு ஏற்ப, பல்வேறு புதுமைகள் புகுத்தப்படுகின்றன.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாக்டர் ஒருவர் தன் மகள் திருமணத்தில் மிகவும் புதுமையான விஷயம் ஒன்றை செய்துள்ளார். திருமண காரை மாட்டு சாணத்தால் அவர் 'கோட்டிங்' செய்துள்ளார். டெஃப்லான் கோட்டிங் உள்பட பல்வேறு கோட்டிங்குகளை பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் இந்த மாட்டு சாண கோட்டிங் புதுமையானது.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் நவ்நாத் டுதால். இவர்தான் தனது மகளின் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட காரை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

மேலும் டாக்டர் நவ்நாத் டுதால் எதற்காக இப்படி செய்தார்? என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்தது. மாட்டு சாணத்தின் பயன்பாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகதான், டாக்டர் நவ்நாத் டுதால் இப்படி செய்துள்ளார் என்பது பின்னர் அவர்களுக்கு தெரியவந்தது. மேலும் இதற்கான காரணங்களையும் அவர் வரிசையாக அடுக்கியுள்ளார்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

மாட்டு சாணத்தால் கேன்சரை குணப்படுத்த முடியும் என டாக்டர் நவ்நாத் டுதால் நம்புகிறார். மேலும் மனித உடலில் இருந்து நோய்களை அகற்றும் திறன் மாட்டு சாணத்திற்கு உள்ளது என்பதும் டாக்டர் நவ்நாத் டுதாலின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தன் மகள் திருமணத்தை பயன்படுத்தி கொண்டு, மிக வித்தியாசமான முறையில் மாட்டு சாணத்தின் பயன்பாட்டை அவர் பிரபலப்படுத்தியுள்ளார்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

மேலும் உலக வெப்பமயமாதலின் ஆபத்துக்கள் அதிகரித்து கொண்டே வருவதாகவும் டாக்டர் நவ்நாத் டுதால் கூறுகிறார். இந்த நேரத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு முக்கியமானது எனவும் அவர் தெரிவிக்கிறார். இதுதவிர மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தது ஏன்? என்பதற்கு இன்னும் ஒரு சில காரணங்களையும் டாக்டர் நவ்நாத் டுதால் கூறியுள்ளார்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்வதன் மூலமாக, கார் கேபினின் டெம்ப்ரேச்சர் குறையும் எனவும் டாக்டர் நவ்நாத் டுதால் கூறியுள்ளார். அத்துடன் செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்தும் மாட்டு சாணம் காப்பாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாட்டு சாணத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்துவதோடு, தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

டாக்டர் நவ்நாத் டுதாலின் கூற்றுப்படி, காரை கழுவுவதற்கு ஒரு நாளைக்கு சுமார் மூன்று பக்கெட் தண்ணீர் செலவாகிறது. ஆனால் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருப்பதன் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. டாக்டர் நவ்நாத் டுதாலின் மகள் வெட்டிங் காராக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) பயன்படுத்தப்பட்டது.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

அந்த காரில்தான் டாக்டர் நவ்நாத் டுதால் மாட்டு சாண கோட்டிங்கை செய்திருந்தார். மேலும் பூக்கள் மற்றும் மாலைகளாலும் அந்த கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அந்த கார் காட்சியளித்தது. எனவே அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அந்த காரை வியப்புடன் பார்த்து சென்றனர்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

ஆனால் ஒருவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்வது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கோடை காலத்தின்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் வாகனத்தை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்ய தொடங்கினர். கார் கேபினின் டெம்ப்ரேச்சர் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர்.

மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்

உலகில் அதிகம் வெப்பம் நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக இங்கு கோடை காலத்தின் போது, வெயில் வாட்டி வதைத்து விடும். பொதுவாக வெளியில் இருக்கும் வெப்ப நிலையை காட்டிலும் காரினுடைய கேபினுக்கு உள்ளே அதிக வெப்பமாக இருக்கும். எனவே கேபின் டெம்ப்ரேச்சர் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்ததாக அவர்கள் கூறினர்.

கடந்த கோடை காலத்தின்போது, டொயோட்டா கரொல்லா அல்டிஸ் (Toyota Corolla Altis) காரை அதன் உரிமையாளர் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார். அதற்கு ஒரு சில வாரங்களுக்கு பின், மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) கார் ஒன்றும் இதேபோன்ற மாட்டு சாண கோட்டிங் உடன் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Doctor Coated His Daughter’s Toyota Innova Wedding Car With Cow Dung. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X