டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

யாரும் எதிர்பார்க்காத செக் ஒன்றை சீனாவுக்கு வைத்துள்ளது இந்தியா. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியா-சீனா எல்லையில் நடந்த இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

சீன ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த மோதல் காரணமாக சீன பொருட்களுக்கு எதிரான மனநிலை இந்தியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் தற்போது சமூக வலை தளங்கள் முழுக்க எதிரொலிக்கிறது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

இந்த சூழலில், சீனாவை சேர்ந்த 3 நிறுவனங்களின் திட்டங்களை, மஹாராஷ்டிர அரசு தற்போது அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்கள் மூலம் கிடைக்கவிருந்த 5,020 கோடி ரூபாய் முதலீட்டை நிறுத்தி வைக்கும் முடிவை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அரசு தற்போது எடுத்துள்ளது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors - GWM), பிஎம்ஐ எலெக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூஷன் (சீனாவின் ஃபோட்டானுடன் கூட்டு முயற்சி) மற்றும் ஹெங்லி இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் திட்டங்கள் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா-சீனா மோதல் எதிரொலியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

இது தொடர்பாக மஹாராஷ்டிரா தொழில் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில், ''மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன'' என்றார்.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

மேலும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் மேற்கொண்டு எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது எனவும் சுபாஷ் தேசாய் கூறியுள்ளார். இந்த முடிவு தற்போது இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

மஹாராஷ்டிர அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் கான்ஃபரன்ஸ் ஒன்றை நடத்தியது. இதில், சீன தூதர் சூன் வெய்டாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்துதான் பெரிய முதலீடு வரவிருந்தது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

புனேவிற்கு அருகே உள்ள தாலேகானில் ஆட்டோமொபைல் பிளாண்ட் அமைப்பதற்காக, 3,770 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டிருந்தது. இது மட்டுமல்லாது, ஃபோட்டான் (சீனா) உடனான கூட்டு முயற்சியில், பிஎம்ஐ எலெக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூஷன் 1,000 கோடி ரூபாய் யூனிட்டை அறிவித்திருந்தது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

இதன் மூலம் அந்த பிராந்தியத்தில் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு வெளியிட்ட பத்திரிக்கை செய்தி கூறியது. கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஆலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அந்த நிறுவனத்தின் முதலீடு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

தாலேகானில் உள்ள ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஹெங்கி இன்ஜினியரிங் 250 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

மேக்னட்டிக் மஹாராஷ்டிரா 2.0 நிகழ்வின் போது, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்தன. இதில், சீன நிறுவனங்களின் மூலம் வரவிருந்த முதலீடுகள் மட்டும் தற்போதைய நிலையில் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Government Puts China Car Maker GWM’s Investment On Hold. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X