டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

ஆட்டோக்களுக்கு கடிவாளம் போடும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் மிக முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக மிகவும் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களால், காற்று பெரும் அளவில் மாசுபடுகிறது.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

எனவே மிகவும் பழைய வாகனங்களை சாலையில் இயக்குவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்டோக்களை சாலையில் இயக்குவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கு மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து ஆணையம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

இதன்படி மும்பை பெருநகர பகுதியில், வரும் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 15 ஆண்டுகளுக்கு மேலான ஆட்டோக்களை இயக்க முடியாது. அதே சமயம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் எஞ்சிய பகுதிகளில், வரும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய ஆட்டோக்களை இயக்க முடியாது.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

தற்போதைய நிலையில் மும்பை பெரு நகர பகுதியில், 16 ஆண்டுகள் வரை வயதுடைய ஆட்டோக்களை இயக்க முடியும். அதே சமயம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் எஞ்சிய பகுதிகளில் 20 ஆண்டுகள் வரை வயதுடைய ஆட்டோக்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வயது வரம்பையுமே தற்போது 15 ஆண்டுகளாக குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதைய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோரிக்ஸாக்கள் இயங்கி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசாங்கத்தின் இந்த முடிவு நியாயமற்றதாகவும், முரண்பாடாகவும் இருப்பதாக ஆட்டோரிக்ஸா உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

இதுகுறித்து ஆட்டோரிக்ஸா தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''மும்பை பெருநகர பகுதிகளில், ஆட்டோரிக்ஸாக்களின் வயது வரம்பை 16 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகள் என ஒரு ஆண்டு குறைப்பது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவின் பின்னால் இருக்கும் லாஜிக்கை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றனர்.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

அரசின் இந்த முடிவால், பழைய ஆட்டோரிக்ஸாக்களை வைத்திருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும், இந்த முடிவை அமலாக்குவதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. காற்று மாசுபாடு பிரச்னையை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவர்கள் புலம்பல்... ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட்ட அரசு... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக இதுபோல் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது முக்கியமான ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Government To Reduce Plying Age Limit Of Autorickshaws - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X