படகு நிறுத்துவதிலும் பார்க்கிங் பிரச்னை... நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

Written By:

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் அண்மையில் தனது 52வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அன்றைய தினம், ரசிகர்களை சந்தித்துவிட்டு, மும்பையிலிருந்து அலிபாக் பகுதியில் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தனது உல்லாச படகில் அலிபாக் படகுத் துறைக்கு சென்றுள்ளார்.

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

ஷாரூக்கான் வருவதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். ஷாரூக்கான் படகு நிறுத்தி இருக்கும் படகுத் துறையை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மஹாராஷ்டிர சட்ட மேல் சபை உறுபிப்னர் ஜெயந்த் பாட்டீல் அங்கு வந்துள்ளார்.

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

அவர் அலிபாக் படகுத் துறையிலிருந்து தனது படகில் மும்பை செல்லும் பொருட்டு அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு ஷாரூக்கான் ரசிகர்கள் குவிந்து இருந்ததால், அவரால் படகுத் துறையை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது. ஜெயந்த் பாட்டீலை தெரிந்து கொண்ட போலீசார், மெதுவாக அவரை படகுத் துறைக்கு அழைத்து வந்துவிட்டனர்.

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

அந்த சமயத்தில், அந்த படகுத் துறையில் நடிகர் ஷாரூக்கான் வந்த படகு நிறுத்தப்பட்டு இருந்தததால், அவர் செல்ல வேண்டிய படகுக் துறைக்கு வர முடியாத நிலை இருந்தது. நடிகர் ஷாரூக்கான் வெளியே வந்த பிறகு, செல்லலாம் என சிறிது நேரம் காத்திருந்தார் ஜெயந்த் பாட்டீல்.

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

ஆனால், நடிகர் ஷாரூக்கான் புகைப்பிடித்தபடி படகில் அமர்ந்து வெளியே வராமல் தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால், கடுப்பான ஜெயந்த் பாட்டீல் விடுவிடுவென நடிகர் ஷாரூக்கான் படகில் ஏறி, அதன் அருகில் நின்றிருந்த தனது படகில் ஏறினார்.

Trending On DriveSpark Tamil:

13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் உரிமையாளர்..!!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

அத்துடன், நடிகர் ஷாரூக்கான் தாமதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாக வசை மாறி பொழிந்தார். "என் அனுமதி இல்லாமல், நீங்கள் இங்கே வர முடியாது. அடுத்தவர்களுக்கு இவ்வாறு தொந்தரவு தரும் செயல் கண்டித்தக்கது என்ற தொனியில் அவர் ஆத்திரத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

இதனை அங்கு நின்றிருந்த ரசிகர்களும், ஷாரூக்கான் உதவியாளர்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். அதேநேரத்தில், ஜெயந்த் பாட்டீல் நடிகர் ஷாரூக்கானின் ரசிகராம். இருப்பினும், நடிகர் ஷாரூக்கான் படகு நிறுத்தப்பட்டு, தனது பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதால், அவ்வாறு நடந்து கொண்டதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

 நடிகர் ஷாரூக்கானை வசை மாறி பொழிந்த அரசியல்வாதி!

சாலையிலும், பார்க்கிங் பகுதிகளிலும் கார் நிறுத்துவதில் நடக்கும் போட்டா போட்டி, சண்டை தினசரி பார்க்கிறோம். ஆனால், படகுத் துறையிலும் பார்க்கிங் பிரச்னையால் ஏற்பட்ட இந்த சம்பவம், அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ஷாரூக்கானை மராட்டிய எம்எல்சி., ஜெயந்த் பாட்டீல் வசை மாறி பொழிந்து செல்வதை வீடியோவில் பார்க்கலாம்.

Trending On DriveSpark Tamil:

13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் உரிமையாளர்..!!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Maharashtra Law Maker Shouts At Shah Rukh Khan. Read in Tamil.
Story first published: Tuesday, November 14, 2017, 11:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark