போலீசுக்கு இவ்ளோ காஸ்ட்லியான காரா! என்ன கார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! கப்பல்ல போற மாதிரி இருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை (Price) 14.03 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.57 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கிடைக்கிறது. இதன் 5 சீட்டர் மாடலானது, டாடா ஹாரியர் (Tata Harrier), எம்ஜி ஹெக்டர் (MG Hector), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

மறுபக்கம் 7 சீட்டர் மாடலானது, டாடா சஃபாரி (Tata Safari), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு கொண்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System), கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் உள்பட ஏராளமான வசதிகள், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கார், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் மஹாராஷ்டிரா மாநில காவல் துறை தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை வாங்கியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமீபத்தில் காவல் துறைக்கான பல்வேறு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்றாகும்.
ஆனால் மஹாராஷ்டிரா மாநில காவல் துறைக்கு மொத்தம் எத்தனை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் வாங்கப்பட்டுள்ளன? என்பது உறுதியாக தெரியவில்லை. அந்த தகவலை அரசு இன்னும் வெளியிடவில்லை. அதேபோல் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களில், போலீஸ் கார்கள் என்பதை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் எதுவும் இல்லை. இந்த ஸ்டிக்கர்கள் பின் நாட்களில் ஒட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹாராஷ்டிரா காவல் துறை ஏற்கனவே மஹிந்திரா டியூவி 300 (Mahindra TUV 300) போன்ற மஹிந்திரா தயாரிப்புகளை பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் இணைந்துள்ளது. இது அதிநவீன வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் கொண்ட கார் என்பதால், காவல் துறைக்கு ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications