பயணிகளின் வயிற்றில் அடிக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள்... அதிரடி முடிவை எடுத்த போலீஸ்... சூப்பர்...
பயணிகளின் வயிற்றில் அடிக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறை அதிகாரிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி ஆகியவை இயக்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன்தான் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகல் பெரிய அளவில் பின்பற்றப்படவில்லை. மேலும் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், அதிக கட்டணம் வசூல் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்த ஒன்றுதான். ஏனெனில் கொரோனா தொற்று அச்சத்தால், பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

அதற்கு பதிலாக சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதில் அவ்வளவு லாபம் கிடைக்காது எனவும், எனவே அதன் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஊரடங்கு தளர்வுகளுக்கு முன்னதாகவே பேசப்பட்டது.

அதை நிரூபிக்கும் வகையில், தற்போது தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், காவல் துறை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளுக்கு இத்தகைய புகார்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டுள்ளன. எனவே விதிமுறைகளை மீறும் பேருந்துகள் மீது காவல் துறை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஒரு சில பஸ்கள், இ-பாஸ்கள் இல்லாமல் பயணிகளை ஏற்றி செல்வதாகவும், அளவுக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்வதாகவும் புனே பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் சமூக விலகல் விதிகளும் காற்றில் பறக்க விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிராதான்.

எனவே அங்கு சமூக இடைவெளியை முறையாக பேண வேண்டிய தேவை உள்ளது. நிலைமை இப்படி இருக்க, பஸ்களில் சமூக விலகல் விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து புனே லக்ஸரி பஸ் சங்க தலைவர் பாலசாகேப் கெதேகர் கூறுகையில், ''கடந்த சில நாட்களாக ஏராளமான பஸ்களை நிறுத்தி நாங்கள் சோதனை செய்தோம்.

இதில், சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மேலும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் கட்டணமாக வசூல் செய்துள்ளனர்'' என்றார். இது போன்ற புகார்கள் காரணமாக விதிகளை மீறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை மற்றும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரிகள் கூறுகையில், ''போதுமான தகவல்களை வழங்கும்படி சங்கத்திடம் கூறியுள்ளோம். அந்த புகார்கள் உறுதி செய்யப்பட்டால், காவல் துறை உரிய நடவடிக்கையை எடுக்கும்'' என்றனர். அதே சமயம் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தை கலந்தாலோசித்து உரிய நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக விதிமுறை மீறலில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். புனே மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு இடங்களிலும் பஸ்களில் சமூக விலகல் பின்பற்றப்படுவதில்லை எனவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் உள்ளன. அங்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுத்தால், நன்றாக இருக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








