பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

மஹாரஷ்டிரா நெடுஞ்சாலைதுறை போலீஸார் அடுத்த 90 நாட்களில் நெஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க புதிய அதிநவீன கேமிராக்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த மிட்டே என்ற செய்திதளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

சாலை விபத்துகளில் இந்தியா முன்னிலை வகிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தற்போது கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளினால் இத்தகைய விபத்துகள் சற்று குறைந்துள்ளது என்றாலும், அதற்கு முன்பெல்லாம் நாளுக்கு நாள் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறுதான் இருந்தது.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

இதனை குறைக்க தற்போதும் போலீஸார் ஏதாவது புது வழிகளை கொண்டுவந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த வகையில் தற்போது மஹாராஷ்டிரா நெடுஞ்சாலைதுறை போலீஸார் மாநிலம் முழுவதுமுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை கண்காணிப்பதற்காக தற்போதைய கேமிராக்களுக்கு மாற்றாக புதிய கேமிராக்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

இந்த கேமிராக்கள் முழுக்க முழுக்க நெடுஞ்சாலைகளில் குறிப்பிடப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் செல்வோரை அடையாளம் காண்பதற்காக கொண்டுவரப்படுகிறது. தற்சமயம் பயன்பாட்டில் உள்ள கேமிராக்களை காட்டிலும் அட்வான்ஸ் தொழிற்நுட்பத்தை கொண்ட புதிய கேமிராவின் மூலமாக ஒரே நேரத்தில் 32 வாகனங்களை கண்காணிக்க முடியும் என மஹாராஷ்டிரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

ரேடார் வேக இயந்திரங்கள் (Radar Speed machines) என அழைக்கப்படும் இந்த புதிய கேமிராக்களில் 155 கேமிராக்களை வாங்க அதிகாரிகள் ஏற்கனவே ஒப்பந்த செயல்முறைகளை ஆரம்பித்துவிட்டனர். பெங்களூர் மற்றும் டெல்லியில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஆர்எஸ்எம் கேமிராக்கள் நெடுஞ்சாலை போலீஸாரின் வாகனங்களின் மேற்புறத்தில் பொருத்தப்படவுள்ளன.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

சாலை பாதுகாப்பு நிதிக்கு மஹாராஷ்டிரா அரசாங்கம் அளித்துள்ள நிதியில் ரூ.13.95 கோடி இந்த புதிய கேமிராக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

இதனால் மஹாராஷ்டிராவை கருத்தில் எடுத்து கொள்ள முடியாது என்றில்லை. ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 20,045 சாலை விபத்துகளும், இதன் மூலமாக 8,175 பேரும் அம்மாநிலத்தில் இறந்துள்ளனர். இத்தகைய விபத்துகளுக்கு சில காரணங்கள் தான் பெரும்பான்மையாக சொல்லப்படுகின்றன.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

அவற்றில் எந்தவொரு அறிவிப்பும் இன்றி ஓட்டுனர் லேன்-ஐ மாற்றுவது, அதிவேகம் மற்றும் மற்ற வாகனங்களை ஆக்ரோஷமாக முந்துவது உள்ளிட்டவைதான் முதன்மையானவைகளாக உள்ளன. இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது அவற்றை இந்த கேமிராக்கள் தடுக்க வாய்ப்பில்லை.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

ஏனெனில் அவற்றான விபத்துகள் ஏற்படும் முன்னரே அவற்றை தவிர்க்க செய்வதுதான் இந்த கேமிராக்களின் வேலை. அதாவது நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விடவும் வேகமாக ஏதாவது ஒரு கார் சென்றால் அந்த கார் இன்று எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் மற்ற வாகனங்களை கடந்து செல்லலாம்.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

ஆனால் என்றோ நாள் அத்தகைய அதி வேகங்களின்போது பெரிய விபத்து ஏற்படும் என்பது உறுதி. அதனால் தான் முதல் தடவை வேகமாக செல்லும்போதே பதிவு எண் உள்பட அந்த வாகனத்தின் மொத்த தோற்றத்தையும் படம் எடுத்துவிட்டால் ஆதாரத்துடன் அந்த ஓட்டுனர் மீது குற்றம் சுமத்தி விபத்துகள் ஏற்படுவதை குறைக்கலாம்.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

போக்குவரத்து போலீஸார் தற்சமயம் இவ்வாறு வேகமாக செல்லும் வாகனங்களை அடையாளப்படுத்த லேசர் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவற்றால் ஒரே நேரத்தில் ஒரு வாகனத்தை மட்டுமே படம் பிடிக்க முடியும். இதன் காரணமாக சில சமயங்களில் போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படுவது.

பயன்பாட்டிற்கு வருகிறது 32 அதிநவீன கேமிராக்கள்... அதிவேக பிரியர்களே உஷார்...!

அதாவது, அந்த வாகனமும் வேகமாகதான் சென்றது, ஆனால் என்னை மட்டும் பிடித்துள்ளீர்கள் போன்ற வாகன ஓட்டிகளின் கேள்விகளை தவிர்க்கவே மஹாராஷ்டிரா நெடுஞ்சாலைதுறை போலீஸார் தற்போது புதியதாக ஆர்எஸ்எம் கேமிராக்களை கொண்டுவருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MH Police to get speed cameras that capture 32 cars at once
Story first published: Tuesday, September 1, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X