ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களில் ஒரு இடத்திற்கு பத்திரமாக சென்று விட்டு திரும்புவது என்பது ஒரு சாதனைதான். அந்த அளவிற்கு இங்கு சாலை பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இதற்கு மோசமான சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதுதான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே இந்த 2 பிரச்னைகளையும் சரி செய்து, சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக சாலைகளின் தரம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முன்பை காட்டிலும் தற்போது சாலைகளின் தரம் மேம்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல் இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வைக்கவும், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. ஆனால் அரசாங்கம் என்னதான் நடவடிக்கைகளை எடுத்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

அதாவது வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வாகன உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே, விலை மதிப்பில்லாத உயிர்கள் சாலை விபத்துக்களில் பறிபோவதை நாம் தடுத்து நிறுத்த முடியும். இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துக்களால் அதிகமாக பாதிக்கப்படுவது இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

அவர்களுக்கு இருக்கும் முக்கியமான பாதுகாப்பு கவசம் ஹெல்மெட்தான். ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவது கிடையாது. இதற்கு வாகன உற்பத்தியாளர்களும் கூட ஒரு காரணமாக உள்ளனர். ஆம், இரு சக்கர வாகனங்களை வாங்கும் அனைவருக்கும் 2 ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் இருக்கிறது.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி 138(4)(f) அப்படிதான் கூறுகிறது. அதாவது இந்த விதியின் கீழ், இந்தியாவில் புதிய டூவீலர்களை வாங்கும் அனைவருக்கும், சம்பந்தப்பட்ட வாகன உற்பத்தியாளர்கள், 2 ஹெல்மெட்களை சப்ளை செய்ய வேண்டும். அதுவும் இந்திய தர நிர்ணய சட்டம், 1986-ன் கீழ், இந்திய தர நிலைகள் பணியகம் செய்துள்ள பரிந்துரைகளின்படி அந்த ஹெல்மெட்கள் இருப்பதும் அவசியம்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

ஆனால் தற்போதைய நிலையில், டூவீலர் உற்பத்தியாளர்கள் இந்த விதிமுறையை மீறுகின்றனர் என்பதுதான் உண்மை. இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும்போது, வாடிக்கையாளர்களுக்கு தலை கவசங்களை அவர்கள் சப்ளை செய்வதில்லை. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இதனால் ஹெல்மெட் விதியை கட்டாயமாக பின்பற்ற உத்தரவிட வலியுறுத்தி, மஹாராஷ்டிரா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு அதிரடியாக தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் விதிகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும், புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று கொண்ட 2 ஹெல்மெட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இல்லாவிட்டால் மஹாராஷ்டிரா மாநிலத்தில், இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படும் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கு (SIAM - Society of Indian Automobile Manufacturers), மஹாராஷ்டிர மாநில போக்குவரத்து துறை கமிஷனர் தற்போது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

2020ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியிட்டு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில், ''டூவீலர்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், உங்கள் உறுப்பினர்கள் (இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள்) இரண்டு தலை கவசங்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் எச்சரிக்கை ஒன்றையும் போக்குவரத்து கமிஷனர் விடுத்துள்ளார்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

இதன்படி மேற்கண்ட ஹெல்மெட் விதிமுறை பின்பற்றப்படாவிட்டால், மஹாராஷ்டிர மாநிலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படும் என கூறியுள்ளார். எனவே இனி புதிய டூவீலர்களை வாங்கும் அனைவருக்கும் 2 ஹெல்மெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஷாக் ஆன மக்கள்... டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்... என்னனு தெரியுமா?

புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் பெரும்பாலானோருக்கு, இப்படி ஒரு விதி இந்தியாவில் இருப்பதே தெரியாது. இது டூவீலர் உற்பத்தியாளர்களுக்கு சௌகரியமாய் போய் விடுகிறது. எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு இந்த செய்தியை பகிருங்கள்.

ஆனால் டூவீலர் உற்பத்தி நிறுவனங்கள் என்னதான் சரியாக ஹெல்மெட்களை கொடுத்தாலும், நாம் அதனை முறையாக பயன்படுத்துவோமா? என்பது சந்தேகமே. ஏனெனில் இந்தியாவில் பலர் ஹெல்மெட் அணிவதை வெறுக்கின்றனர். தலைகவசம் உயிர் காக்கும் என்பதை மனதில் கொண்டு கட்டாயமாக ஹெல்மெட் அணிவேன் என அனைவரும் உறுதி எடுத்து கொள்வது அவசியம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Transport Commissioner Asks SIAM To Follow 2 Helmets Per Two-Wheeler Rule. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X