கோடி கோடியாய் சுருட்டப்படும் மக்கள் வரிப்பணம்.. பெட்ரோல் விலையை குறைக்காததற்கான பகீர் தகவல் லீக்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில், சாமானிய மக்களின் வரிப்பணம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில், சாமானிய மக்களின் வரிப்பணம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுதான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

இதுதவிர பெட்ரோல், டீசல் விலையை இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வராமல் இருப்பதும், விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையானது, ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், அதன் விலை பெரும் அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

ஏனெனில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரும் பட்சத்தில் அதிகபட்சமாக 28 சதவீதம்தான் வரி விதிக்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வரியை விதித்தால் கூட, பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்து விடும். ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் பெரும் அளவிலான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் 1 ரூபாய் குறைத்தால் கூட, ஒரு ஆண்டுக்கு 2,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மகாரஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

இதனிடையே இந்த 2,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது மகாராஷ்டிரா என்ற ஒரு மாநிலத்திற்கு மட்டும். அதுவும் குறைந்தபட்சம் 1 ரூபாய் மட்டும் விலையை குறைத்தால் ஏற்படும் வருவாய் இழப்பு இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

அப்படியானால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 1 ரூபாய் என்ற அளவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் கூட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

எனவேதான் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாயை பெருமளவில் நம்பியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

தமிழகத்தை மட்டும் எடுத்து கொண்டால், பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி மற்றும் டாஸ்மாக் மது விற்பனை ஆகிய இரண்டின் மூலம் மட்டும், ஒட்டுமொத்த வருவாயில் பாதிக்கும் மேல் கிடைத்து விடுவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

எனவே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சந்தேகமே. நிலைமை இப்படி இருக்க ஒரு சில மாநில அரசுகள் மட்டும் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

இதன்படி காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. அதேபோல் ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் வாட் வரியை குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வாட் வரியானது, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது இல்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (செப்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 78.69 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

சென்னையின் நிலை இப்படி இருக்க, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், கடந்த சில நாட்களாகவே 90 ரூபாய்க்கும் அதிகமான விலையில்தான் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான ரகசியம் இதுதான்..

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 90.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு லிட்டர் டீசலின் விலை 79.01 ரூபாய். இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை வெகு விரைவில் 100 ரூபாயை கடந்து விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் மாடலாக வர இருக்கும் வஸிராணி ஷூல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் கான்செப்ட் மாடல் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, September 28, 2018, 12:38 [IST]
English summary
Maharashtra Will Lose Rs 2,200 Crore a Year if it Slashes Fuel Price Rs 1/Litre. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+