நம்ம ஊரு வண்டிக்காக தல டோணி, பிரபுதேவாவின் கலக்கலான 'வேட்டி' டான்ஸ்!

Written By:

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிற்காக டோணியும், பிரபுதேவாவும் இணைந்து போட்ட 'வேட்டி' டான்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த விளம்பர படத்தில் டோணியின் கலக்கல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழன்...

தமிழன்...

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவராகிய பின் தமிழனாகவே பார்க்கப்படுகிறார் தல டோணி. இதனால், தமிழ்நாட்டில் நடிகர்களைவிட, டோணிக்கு ரசிகர்கள் அதிகம்.

நம்ம ஊரு வண்டி

நம்ம ஊரு வண்டி

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பைக்கை பிரபலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் புதிய விளம்பரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான வேட்டியில் கலக்கியிருக்கிறார் டோணி.

பிரபுதேவாவும் கலக்கல்...

பிரபுதேவாவும் கலக்கல்...

இந்த விளம்பரத்தில் வேட்டியில் சங்கோஜப்பட்டு நிற்கும் டோணியை நடனப்புயல் பிரபுதேவா உற்சாகப்படுத்துவதுடன், வேட்டியை எவ்வாறு கட்ட வேண்டும் என்று சாெல்லித் தரும் வகையில், பதிவு செய்துள்ளனர்.

வேட்டி கட்டுவது எப்படி

வேட்டி கட்டுவது எப்படி

வேட்டியை எந்தெந்த பக்கமாக மடித்துக் கட்டி சொருகுவது என்று பிரபுதேவா நடனமாடிய சொல்லிக் கொடுக்க, அதனை பின்பற்றி வேட்டியை கட்டிவிடும் டோணி, அதே தெம்பில் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்கிறார்.

இது குத்து...

இது குத்து...

இந்த விளம்பரத்தில் வரும் வேட்டி டான்ஸ் தற்போது வைரலாகியுள்ளது. நீங்களும் அந்த விளம்பரத்தை கண்டு களியுங்கள். தமிழனாகவே மாறியிருக்கும் உங்கள் டோணியை பாருங்கள்.

வீடியோ

தல டோணியும், நடனப்புயல் பிரபுதேவாவும் இணைந்து கலக்கும் வீடியோ இதோ...

 ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஊரக மார்க்கெட்டுகளில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. 110சிசி எஞ்சின் ரகத்தில் ஸ்டைலான தோற்றம், சிறந்த மைலேஜ் மற்றும் சரியான விலையில் கிடைக்கும் மாடலாக பார்க்கப்படுகிறது.

  
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
MS Dhoni was seen shaking a leg with professional dancer Prabhu Deva in an advertisement.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark