மஹிந்திரா மீது வழக்கு தொடர்ந்த இன்டிகோ.. நல்ல கார கொண்டாந்தாலே இப்படிதான் நடக்குமோ.. இப்படியும் சிக்கல் வருமா!

இந்தியாவின் மின்சார வாகன தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக முன்னணி நிறுவனங்கள் புதுமுக மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6இ (BE 6e) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டில் பிஇ 6இ கார் மாடலால் மஹிந்திரா நிறுவனத்திற்கு தலைவலி ஏற்படத் தொடங்கி இருக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் சட்ட சிக்கலையே அது பிஇ 6இ கார் மாடலால் சந்திக்கத் தொடங்கி இருக்கின்றது. இன்டிகோ (IndiGo) நிறுவனமே மஹிந்திரா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. 6இ (6E) என்பது தங்களின் விமான வழித் தடத்தைக் குறிக்கக் கூடிய குறியீடு என்றும், இது தங்களின் பயணிகளை குழப்பமடையச் செய்யும் என்கிற வாதத்தையும் முன் வைத்தே தன்னுடைய டிரேட்மார்க் மீறல் வழக்கை முன் வைத்திருக்கின்றது, இன்டிகோ.

Mahindra addresses indigo s 6e trademark concerns

இதற்கே தங்கள் தரப்பு பதிலை மஹிந்திரா கொடுத்திருக்கின்றது. தாங்கள் பயன்படுத்தி இருக்கும் பிஇ 6இ, இன்டிகோவின் 6இ-யிடமிருந்து மாறுபட்டது என்றும், 6இ என தனியாக குறிப்பிடாமல் நாங்கள் பிஇ 6இ என்றே பெயரைச் சூட்டி இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால், இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் அது கூறி இருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய பிஇ 6இ எலெக்ட்ரிக் காருக்கான டிரேட்மார்க் பதிவை கிளாஸ் 12-இன் கீழேயே செய்திருக்கின்றது. இது வாகனங்களுக்கான பிரிவு ஆகும். இதையும் தங்களுடைய வாதத்தில் மஹிந்திரா சேர்த்திருக்கின்றது. இத்துடன், மஹிந்திரா நிறுவனம் தற்போது இன்டிகோ உடன் சமூக செல்வதற்கான பேச்சுவார்த்தையிலும் அது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சொல்லப்போனால், இதன் வெளிப்புற லுக் இப்போதும் கான்செப்ட் மாடலைப் போலவே தனித்துவமானதாக உள்ளது. தொடர்ந்து, வெளிப்புற லுக்கைப் போலவே உட்பக்கமும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றது.

அதுமட்டுமில்லைங்க, ரேஞ்ச் தருவதிலும் இந்த கார் மிக சிறந்ததாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 535 கிமீ முதல் 682 கிமீ வரையில் பயணிக்க முடியும். 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இரண்டு டிஜிட்டல் திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று டிரைவருக்கானதாகவும், மற்றொன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, மல்டி ஜோன் கன்ட்ரோல் கொண்ட ஏசி சிஸ்டம், டூயல் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 1400 வாட் திறன் கொண்ட 16 ஸ்பீக்கர்கள் ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய பலதரப்பட்ட அம்சங்களைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே அதன் பெயர் காரணமாக டிரேட்மார்க் மீறல் சிக்கலில் சிக்கியிருக்கின்றது. விரைவிலேயே இந்த பிரச்னையில் இருந்து பிஇ 6இ மீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு மஹிந்திரா நிறுவனம் ரூ. 18.90 லட்சம் என்கிற விலையையே நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 இவி (XUV 400 EV)-க்கு அடுத்தபடியாக மேலும் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2024, 23:13 [IST]
English summary
Mahindra addresses indigos trademark infringement lawsuit on be 6e branding
மேலும்... #india #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+