கார்களை மட்டுமே தயாரிக்கும்னு நினைச்சா மஹிந்திரா ஹெலிகாப்டரையும் தயாரிக்குதா!.. இந்தியாவில் தயாராக போகுது!
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Mahindra Aerostructures Pvt. Ltd)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தையே உலக புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தன்னுடைய பிரபலமான ஹெலிகாப்டர் மாடலை தயாரிப்பதற்காக தேர்வு செய்திருக்கின்றது. எச்130 ஹெலிகாப்டர் ஃப்யூஸ்லேஜ் (H130 Helicopter Fuselage) எனும் மாடலையே மஹிந்திரா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்தியாவிலேயே இதை அது தயாரிக்க இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் ஐரோப்பாவில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஹெலிகாப்டர் உற்பத்தி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பணிகள் வருகின்ற 2027 மார்ச் மாதத்தில் தொடங்கிவிடும் என இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் இரண்டு நிறுவனங்களும் ஹெலிகாப்டர் உற்பத்தியை முன்னிட்டு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டன. இந்த நிகழ்வே சமீபத்தில் மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம மோகன் நாயுடு தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஏர்பஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இருந்தனர்.
2027 மார்ச் மாதத்திற்குள் டெலிவரி பணி தொடங்கப்பட இருப்பதால் விரைவிலேயே மஹிந்திரா நிறுவனம் ஹெலிகாப்டர் உற்பத்தி பணிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மஹிந்திரா நிறுவனம் ஹெலிகாப்டர் உற்பத்தி பணியைத் தொடங்கும்பட்சத்தில் உலகளாவிய அளழில் விமான உற்பத்தி துறையில் அது முக்கிய பங்குதாரராக மாறக் கூடும்.

இது இந்திய நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் கிடைக்கும் மிகப் பெரிய பெருமை ஆகும். ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் கார் மாடல்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சவால் விடுக்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே மஹிந்திரா குழுத்திற்கு சொந்தமான மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் வானூர்திகளைத் தயாரிக்கும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றது.
நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. முன்னணி பிரபலங்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை இந்த காரை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் மகாராஜ பட வில்லன் அனுராக் காஷ்யப் கூட இந்த காரை வாங்கியிருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே எச்130 ஹெலிகாப்டர் ஃப்யூஸ்லேஜ் ஹெலிகாப்டர்களை மஹிந்திரா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த ஹெலிகாப்டரை மட்டுமல்ல வரும் நாட்களில் ராணுவ பயன்பாட்டிற்கான சி295 விமானம் மற்றும் எச்125 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் பெரும் முதலீட்டின்கீழ் இந்தியாவில் வைத்து ஏர்பஸ் தயாரிக்க இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்130 ஹெலிகாப்டரின் சிறப்புகள்: இது ஓர் ஒற்றை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் ஆகும். பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத் துறை மற்றும் தனி நபர் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் ஹெலிகாப்டரே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல மருத்துவ அவசரத்திற்கு பயன்படும் ஹெலிகாப்டராகவும் இது இருக்கின்றது.
அகலமான மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட கேபினையே இந்த ஹெலிகாப்டர் கொண்டிருக்கும். இதனால்தான் உலக பணக்காரர்கள் பலரின் பிரியமான தேர்வாக இந்த ஹெலிகாப்டர் இருக்கின்றது. இந்த ஹெலிகாப்படரில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை பயணிக்க முடியும். அவ்வாறு அவர்கள் அமர்ந்து பயணிக்கும்போது பரந்த பார்வையை ஹெலிகாப்டரின் கேபின் வழங்கும்.
இதற்கேற்ப பெரிய பெரிய சன்னல்களையே ஏர்பஸ் நிறுவனம் எச்130 ஹெலிகாப்டரில் வழங்கி இருக்கின்றது. சுற்றிலும் அகலமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் சன்னல்களை இதில் காண முடியும். இதுமட்டுமல்ல பாதுகாப்பு வசதிகளையும் இது மிக தாராளமாகக் கொண்டிருக்கும். இதேபோல், அதிக ஆற்றலுடன் அது பறக்கும்.
எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் பற்றிய சிறப்புகள்: இந்த எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் ஆரம்ப நிலை தேர்வில் 59 kWh பேட்டரி பேக்கும், உயர் நிலை வேரியண்டுகளில் 79 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் முதல் பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று ஓர் முழு சார்ஜில் 656 கிமீ வரையில் ரேஞ்சையும் தரும்.
பிஇ 6 எலெக்ட்ரிக் கார் பற்றிய சிறப்புகள்: எக்ஸ்இவி 9இ கார் மாடலைக் காட்டிலும் சற்றே சிறிய உருவம் கொண்டதே பிஇ 6 ஆகும். இதன் ஆரம்ப நிலை தேர்விற்கு ரூ. 18.90 லட்சமும், உயர்நிலை தேர்விற்கு ரூ. 26.90 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். எக்ஸ்இவி 9இ மாடலில் வழங்கப்படும் அதே பேட்டரி பேக் தேர்வே இதிலும் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் விலை குறைவான தேர்வு வரப்போகுதா?.. இன்றைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களிலும் ரியர் வீல் டிரைவ் வசதியை மட்டுமே வழங்கி இருக்கின்றது. விரைவில் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமல்ல, இந்த கார் மாடலின் விலையைக் குறைக்கும் பொருட்டு சிறிய பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வையும் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், சந்தையின் மின்சார கார் பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், மஹிந்திரா நிறுவனம் இரு மாடல்களிலும் விலை குறைவான வேரியண்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என உறுதியாக நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததைபோல இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் ஹெலிகாப்டராகவே எச்130 மாடல் உள்ளது. இதையே இந்தியாவில் வைத்து மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








