குடியரசு தின விழாவில் பச்சை கலரில் வந்து பலரின் கவனத்தை கவர்ந்த வாகனம்! இது நம்ம இந்திய தயாரிப்பா! நம்பவ முடில
இந்திய குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் விதமாக வீரர்களின் அணி வகுப்பைத் தொடர்ந்து, வாகனங்கள் சிலவற்றின் அணி வகுப்பும் அரங்கேற்றப்பட்டது. இந்த அணிவகுப்பில் பச்சை நிற வண்ணத்தில் மிடுக்காக ஊர்ந்து சென்ற வாகனம் ஒன்று பலரின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தது. நம்மில் ஒரு சிலருக்கு அது இந்திய தயாரிப்பு என்று என தெரியும். ஆனால், பலருக்கு அது என்ன கார் மாடல் என்பதே தெரியாது. மிக முக்கியமாக அது இந்திய தயாரிப்பா என ஆச்சரியத்துடன் கேட்கக் கூடியவர்களே மிக அதிகளவில் இருக்கின்றனர். இத்தகையோருக்கான பதிவே இதுவாகும்.
ஆமாங்க, குடியரசு தின விழாவில் பலரின் கவனத்தைக் கவர்ந்த அந்த பச்சை நிற காரின் சிறப்புகள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அந்த பச்சை நிற கார் மாடலின் பெயர் அர்மேடோ (Armado) ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பாதுகாப்பு கவசம் வசதிக் கொண்ட இலகு ரக சிறப்பு வாகனம் (Armoured Light Specialist Vehicle) ஆகும்.

இந்த வாகனத்தையே குடியரசு தின அணிவகுப்பில் வீரர்கள் பயன்படுத்தினர். சென்ற ஆண்டும் இந்த வாகனம் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்திய ராணுவத்திற்கு என்றே பிரத்யேகமாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனமே இது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, இந்த வாகனத்தை தயாரித்தது புகழ்பெற்ற நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவே ஆகும்.
ஆனால், இது பார்ப்பதற்கு உள்ளூர் தயாரிப்பை போலவே தெரியாது. அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாகவே மஹிந்திரா நிறுவனம் அர்மேடோவை தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் டெலிவரி பணிகள் முதன்முதலில் தொடங்கியது 2012 ஆம் ஆண்டிலேயே ஆகும். புல்லட்டால் துளைக்க முடியாத பாடி பேனல்களையே இந்த வாகனம் கொண்டிருக்கும்.
தீவிரவாத தாக்குதல் மற்றும் போர் காலங்களில் வீரர்கள் பாதுகாப்பாக சென்று எதிரிகளைத் தாக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே மஹிந்திரா அர்மேடோ-விற்கு இந்த திறன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டும் அல்ல இன்னும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை தாங்கிய ஓர் வாகனமே அர்மேடோ ஆகும்.
பி7 மற்றும் ஸ்டேனக் லெவல் 2 ஆகிய ஸ்டாண்டர்களுக்கு ஏற்பவே இந்த வாகனத்தை மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது. அனைத்து நிலைகளிலும் இந்த வாகனம் மிகுந்த பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கு சான்றாகவே இந்த தகவல் இருக்கின்றது. பல நிலைகளில் இந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.
எல்லை கண்கானிப்பு போன்ற முக்கிய பணிகளுக்கும் இந்த வாகனம் உட்படுத்தப்படுகிறது என்பது கவனிக்கத்தகுந்தது. பயன்பாடு மற்றும் பாதுகாப்பில் மட்டுமல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் ஆக சிறந்த கார் மாடலாக மஹிந்திரா அர்மேடோ காட்சியளிக்கின்றது. 3.2 லிட்டர் டர்போ சார்ஜட் டைரக்ட் இன்ஜெக்சன் டீசல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
215 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஓர் எஞ்சினே இதுவாகும். 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120கிமீ ஆகும். இந்த வாகனத்தில் ஒரு டன் வரையிலான எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்த வாகனம் பஞ்சரே ஆனாலும் சாலையில் இயங்கும். முழுமையாக பஞ்சரானாலும் இந்த வாகனம் 50 கிமீ தூரம் வரை தடையில்லாமல் பயணிக்கும். இதற்காக 17 அங்குல 318/80 வகை ரப்பர் டயரே பயன்படுத்தப்படுகின்றது. இதன் எக்சாஸ்ட் சிஸ்டம் தானாகவே சுத்தம் செய்துக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.
எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த வாகனம் ஆகும். குறிப்பாக, கரடு-முரடான பாதை மற்றும் நீர் நிறைந்த சாலை என எதுவாக இருந்தாலும் அர்மேடோ சமாளித்து கடந்து வந்துவிடும். இதுபோன்று இன்னும் பல தனித்துவமான திறன்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மஹிந்திரா அர்மேடோ வாகனத்தை இந்திய ராணுவம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா அர்மேடோ கார் இந்தியாவின் பெருமை மிகுந்த தயாரிப்பாகும். இந்த வாகனத்தை குடியரசு தின விழாவின் அணிவகுப்பின்போது பயன்படுத்தப்பட்டது நாட்டிற்கும், நிறுவனத்திற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, அதன் அடர் பச்சை நிறம் அந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








