இந்த காரை உருவாக்கியதற்கு மஹிந்திரா சட்டை காலரை தூக்கிவிடலாம்! பக்கத்தில் செல்வது எந்த கார்னு தெரியுதா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். அடுத்த தலைமுறை மக்களுக்கு ஏற்ப மிகவும் ஸ்டைலிஷாக, நன்கு பெரிய தோற்றத்தில் பிஇ 6 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை காட்டிலும், அளவில் பெரியதான மற்றும் விலைமிக்க எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் காரையும் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இருப்பினும், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் தோற்றத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு சான்றாக, இணையத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், குஜராத் மாநில நம்பர் பிளேட் உடன் சிவப்பு நிற மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் செல்வதை காண முடிகிறது. இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமே, சாலையில் சென்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை காட்டிலும் பிஇ 6 எலக்ட்ரிக் கார் எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்பதை காட்டுவதற்காக ஆகும்.

mahindra be6 with toyota fortuner

இந்த இரண்டு கார்களையும் அருகே பார்ப்பதற்கு ஏதுவாக, சாலையில் பிஇ 6 எலக்ட்ரிக் காரும், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் அருகருகே செல்வதை பார்க்க முடிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆனது இந்தியாவில் மிகவும் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்றாகும். ஃபார்ச்சூனரின் அடையாளமே அதன் அளவில் பெரியதான கம்பீரமான தோற்றம் ஆகும். மற்ற விலை குறைவான கார்களுக்கு அருகே நின்றால், ஃபார்ச்சூனர் தனியாக தனித்து தெரியும்.

அந்த அளவிற்கு, சாலையில் மிதக்கும் சிறிய ரக கப்பல் போன்று ஃபார்ச்சூனரை டொயோட்டா உருவாக்கி வருகிறது. அதுமட்டுமின்றி, ஃபார்ச்சூனர் ஆனது கரடு, முரடான சாலைகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி கார் ஆகும். இதனால், எந்தவொரு சாலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப இந்த டொயோட்டா காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து நன்கு உயரமாக வழங்கப்படுகிறது.

mahindra be6 with toyota fortuner

இதனாலேயே, ஃபார்ச்சூனர் கார் நன்கு உயரமானதாக விளங்குகிறது. மேலும், ஃபார்ச்சூனரில் 7 இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு, அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் இயங்குவதினாலேயே இந்தியர்கள் பலரது கனவு வாகனமாக ஃபார்ச்சூனர் விளங்குகிறது. ஆனால், காலம் மாறி வருகிறது. காலத்தை வெல்லும் சக்தி எதற்கும் கிடையாது.

கடந்த 100 ஆண்டுகளில் கார்களின் தோற்றம் பல விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த பரிணாம வளர்ச்சிகளின் ஒட்டுமொத்த உருவமாக மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் காட்சியளிக்கிறது. இதனால், டொயோட்டா ஃபார்ச்சூனர் காராக இருப்பினும், பிஇ 6 காருக்கு முன் ஃபார்ச்சூனர் அளவில் சிறியதாக உள்ளது. அளவில் மட்டுமின்றி, ஸ்டைலிலும் ஃபார்ச்சூனரை காட்டிலும் பல மடங்கு மேம்பட்டதாக பிஇ 6 காட்சியளிக்கிறது.

mahindra be6 with toyota fortuner

பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு முன்பே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 (XUV400) என்கிற எலக்ட்ரிக் காரை விற்பனை செய்துவந்தது. இருப்பினும், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் புதிய முயற்சிகளுடன் தீவிரமாக இறங்கியது. இதன் ஒருபகுதியாக, தனது எதிர்கால எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு என்றே பிரத்யேகமான 'இங்க்லோ' (INGLO) பிளாட்ஃபாரத்தை மஹிந்திரா கட்டமைத்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் உடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் நீளம் கிட்டத்தட்ட 400மிமீ குறைவுதான். அதேபோல், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் உயரமும் குறைவே. இருப்பினும், அகலம் என்கிற ஒரு விஷயத்தில் பிஇ 6 எலக்ட்ரிக் கார் பார்ப்போரை ஆச்சிரியப்பட வைக்கிறது. இத்தனைக்கும் ஃபார்ச்சூனரை காட்டிலும், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் அகலம் வெறும் 52மிமீ மட்டுமே அதிகம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சரியான போட்டியாக இருந்தது ஃபோர்டு எண்டேவியர் ஆகும். ஆனால், அதன் விற்பனை இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இதனால், சரியான போட்டி இல்லாததினாலேயே ஃபார்ச்சூனரை பெரிய அளவில் அப்டேட் செய்யாமல் டொயோட்டா உள்ளது. ஆனால், மார்க்கெட் சூழல் மாறி வருவதை உணர்ந்து அதற்கேற்ப டொயோட்டா நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2025, 11:38 [IST]
English summary
Mahindra be 6 electric car seen with toyota fortuner on the road
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X