மகனை துரத்தி துரத்தி அடித்த தாய்! செஞ்ச வேலை அப்படி! வைரலாகும் வீடியோ!

மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி9இ ஆகிய கார்களின் டெலிவரியை தற்போது துவங்கியுள்ளது. இந்த காரை புக் செய்த பலர் தற்போது டெலிவரியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த காரை வாங்கி மாடிஃபிகேஷன் செய்பவர்கள் இந்த காரை மாடிஃபிகேஷன் செய்யும் வீடியோவையும் பார்த்திருப்போம். இப்படியாக காரை மாடிஃபிகேஷன் செய்த காரை தனது தாய்க்குகாண்பித்த நிலையில் தாய் மகனை துரத்தி துரத்தி அடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்றால் அது வாகன விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மாடிபிகேஷன் செய்தால்பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.

Mahindra BE6 Modification

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒரவர் மீபத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ6 காரை புக் செய்து வாங்கியுள்ளார். இவர் இதுபோல பல கார்களை வத்துள்ளார். இவர் பிஇ6 காரை வாங்கியதும் அதை தனக்கு பிடித்து போல மாடிஃபிகேஷன் செய்ய முடிவு செய்தார். இவர் மஞ்சள் நிற விரும்பி என்பதால் இவரிடம் இருக்கும் பெரும்பாலான கார்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கிறது. இவர் தனது காரை மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி அவர் இந்த காரை மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதற்கிடையில் இந்த காரை தன் மகன் வாங்கப்போவதாக முடிவு செய்தபோதே தாய் இந்த காரை மாடிஃபிகேஷன் செய்ய வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. அவருக்கு மாடிஃபிகேஷன் செய்த காரின் லுக் தான் பிடித்திருந்ததாக கூறியிருந்தது.

Mahindra BE6 Modification

இந்நிலையில் இந்த காரின் பெரும்பான்மையான பகுதியை மஞ்சள் நிறத்திலும் காரின் கிளாடிங், மற்றும் ஃபிரெங்க் பகுதி முன்பக்க,கிரில், பம்பர் பகதியை எல்லாம் அவர் கிளாஸி கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்திருந்தார். இந்த டுயல் டோன் லுக் காரை கண்கவரும் விதாக மாற்றியிருந்ததது. இந்நிலையில் மாடிஃபிகேஷேன் செய்த காரை தன் தாய்க்கு காட்ட முடிவு செய்தார்.

இதை ஒரு சர்ப்பிரைஸ் நிகழ்வாக மாற்றி தாய்க்கு காட்டு இந்த நிகழ்வை வீடியோகவும் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவில் மஞ்சள் நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த காரை பார்த்ததும் தாய் ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டார். தன் தாய் ஷாக் ஆனதை உணர்ந்த மகன் விபரிதமாகபோவதை உணர்ந்து அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.

Mahindra BE6 Modification

அவரை விடாமல் விரட்டி பிடித்த தாய் அவர திட்டி தீர்த்து விட்டார். முழுவது மலையாளத்தில் பேசும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ சிரிப்பாக இருப்பதாக பலர் பகிர்ந்து வரகின்றனர். கார் மாடிஃபிகேஷன் செய்த பலருக்கு இந்த வீடியோ தன் வாழ்வில் ஒரு முறையாவது நடந்த சம்பவமாக இருந்திருக்கும்.

மஹிந்திரா பிஇ6 காரை பொருத்தவரை 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டதாக இருக்கிறது. இந்த வீடியோவில் நாம் பார்ப்பது 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் கொண்ட கார் ஆகும். இந்த கார் 450-500 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மஹிந்திரா நிறுவனம் 683 கி.மீ ரேஞ்சை வழங்கும் என கூறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மாடிஃபிகேஷன் பலருக்கும் பிடித்த விஷயம் தான். இந்த கார் மாடிஃபிகேஷன் செய்வது வீட்டாருக்கு பிடிக்காது சட்டப்படி செய்யப்படும் மாடிஃபிகேஷனிற்கு எந்த விதமான பிரச்சனையும் வராதது.சட்ட விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்தால் அது நிச்சயம் அபராதம் செலுத்த வழி வகுக்கும். இதனால் நீங்கள் காரை மாடிபிகேஷனவ் செய்தால் கவனமாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2025, 17:25 [IST]
English summary
Mahindra be6 modification yellow wrap watch video
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X