இப்படியொரு மஹிந்திரா பொலேரோ வாகனத்தை பார்த்திருக்கவே மாட்டீர்கள்... டயர்கள் படு பயங்கரமாக இருக்கே!!

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் ஒன்று அளவில் பெரிய 33-இன்ச் டயர்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த மாடிஃபை பொலேரோ காரை விவரிக்கும் வீடியோவினை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய காராக பொலேரோ விளங்குகிறது. கடந்த பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் இந்த மஹிந்திரா வாகனம் கடந்த காலங்களில் இருந்து பெரியதாக அப்டேட் செய்யப்படாவிடினும் கார் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது. இதனாலேயே பலர் தங்களது பொலேரோ வாகனங்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்துள்ளதையும் பார்த்துள்ளோம்.

mahindra bolero modified

இந்த வகையில், மஹிந்திரா பொலேரோ கார் ஒன்று அளவில் பெரிய 33-இன்ச் டயர்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டு இருப்பது என்னவோ 16-இன்ச் சக்கரங்கள் தான். ஆனால் அவற்றில் பொருத்தப்பட்டு இருப்பது அளவில் பெரியதான 33-இன்ச் டயர்களாகும். இந்த டயர்கள் எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய ஆஃப்-ரோடு ஆல்-டெர்ரன் டயர்கள் ஆகும். இந்த பொலேரோ வாகனம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள், காரின் செயல்படுதிறனை காண்பிப்பதற்காக மலைப்பிரதேச பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் இந்த கதையின் நாயகனான பொலேரோ கார் உடன் மேலும் 2 பொலேரோ கார்களையும் காண முடிகிறது. 33-இன்ச் டயர்களை கொண்ட பொலேரோ காரை அறிமுகப்படுத்துவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோவில், அதன்பின் காரை சுற்றிலும் காண்பிக்கப்படுகிறது.

mahindra bolero modified

இது பொலேரோ பிஎஸ்6 காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதற்கு பளபளப்பான கருப்பு நிற வ்ராப் வழங்கப்பட்டுள்ளது. சக்கரத்தின் டயர்கள் பெரியதாக்கப்பட்டுள்ளதால், முன் சக்கரங்கள் காரின் முன்பக்க முனை வரையில் வந்துள்ளன. இதற்காக முன் பம்பர் நேர்த்தியாக கட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன்பக்க பம்பர் முன் டயர்களுடன் உரசப்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும் பொலேரோ வாகனம் என்பதையும், இதனால் இத்தகைய அளவில் பெரிய டயர்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதையும் வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. மேலும், அளவில் பெரிய டயர்களினால் ஆறுகளிலும், நீர் தேங்கிய இடங்களிலும் இந்த பொலேரோ வாகனத்தில் எளிதாக செல்வதையும் மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

mahindra bolero modified

டயர்களின் ஆக்ரோஷமான குதித்தல்களை தாங்குவதற்காக கூடுதலாக இரு சுருள்கள் பின்பக்க சஸ்பென்ஷனில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், முன்பக்க சஸ்பென்ஷனிலும் தடிமனான புஷிங் சேர்க்கப்பட்டுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். இவ்வாறான மாடிஃபிகேஷன் பணிகளை காரின் உட்பக்க கேபினிலும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இருக்கைகள் காரின் வெளிப்பக்கத்திற்கு ஏற்ப கருப்பு நிற லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான தடிமனான கஸ்டம் டயர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பல முறை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவற்றை போல் இந்த பொலேரோ எஸ்யூவி காரும் சிறப்பான தோற்றத்தில் உள்ளதை சொல்லியே ஆக வேண்டும். இது விலை குறைவான பொலேரோ வேரியண்ட் என்ற குறை எந்த இடத்திலும் தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 20:25 [IST]
English summary
Mahindra bolero customised with big tyres
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X