இந்த பொலிரோ காரை ஓட்ட டிரைவர் வேண்டாம்... டிரைவர் பொழப்புக்கு ஆப்பு வைக்கும் தொழில்நுட்பம்...
டிரைவர் தொழிலுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஓர் தொழில்நுட்பமாக தானியங்கி டிரைவிங் வசதியை வழங்கும் தொழில்நுட்பம் (Autonomous Driving Technology) இருக்கின்றது. இந்த அம்சத்தையே மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) கார் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே இந்தியாவின் முதல் தானியங்கி வசதிக் கொண்ட பொலிரோ கார் ஆகும்.
இந்த வசதி எப்படி பொலிரோ காரில் சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். மேலும், மஹிந்திரா நிறுவனம் அப்டேட் வாயிலாக இந்த அம்சத்தை பொலிரோவில் வழங்கி இருக்கின்றதோ என்றுகூட நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. இந்த அம்சத்தை இந்த அம்சத்தை ஓர் தனியார் நிறுவனமே மஹிந்திரா பொலிரோவில் வழங்கி இருக்கின்றது.

அந்த நிறுவனம் வாகனங்களுக்கான தனித்துவமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனம் ஆகும். இதன் அடிப்படையிலேயே தாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தை சோதனையோட்டம் செய்யும் விதமாக பொலிரோ காரில் பொருத்தி, அதனை சோதனையோட்டம் நடத்தி இருக்கின்றனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது, மஹிந்திரா பொலிரோ கார் மனித தலையீடு இன்றி தானாக பயணிக்கும் வீடியோவே வைரலாகிக் கொண்டு உள்ளது. ஓட்டுநர் தொழிலுக்கு ஆப்பு வைக்கக் கூடிய தொழில்நுட்பமாக தானியங்கி டிரைவிங் வசதியை வழங்கும் தொழில்நுட்பம் பார்க்கப்படுகின்றது.

காரில் ஓர் டிரைவர் இருந்தால் எப்படி சாதூர்யமாக செயல்படுவாரோ அதைப் போலவே பலமடங்கு சிறப்பாக செயல்படும் ஓர் அம்சமே இதுவாகும். ஏன், டிரைவர்களைக் காட்டிலும் அதி விரைவாகவும், சிறப்பாகவும் இந்த அம்சம் செயல்படும் என்றுகூட கூறலாம். இத்தகைய அம்சத்தையே மஹிந்திரா பொலிரோ கார் பெற்றிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் தானியங்கி டிரைவிங் வசதியை ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்களே அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளில் மட்டும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மஹிந்திராவும் ஓர் நிறுவனமாக அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் லெவல் 2 அடாஸ் அம்சம் வாயிலாக அந்த சிறப்பு வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே கூறியதைப் போல பொலிரோ பெற்றிருப்பது மஹிந்திராவால் வழங்கப்பட்ட தானியங்கி அம்சம் அல்லது. அது ஸ்வாயட் ரோபோட்ஸ் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் பொலிரோவை தானாக இயங்கும் காராக மாற்றுவதற்காக பலதரப்பட்ட சென்சார்கள், கேமிராக்கள் மற்றும் ரேடார்கள் ஆகியவற்றைத் வழங்கி இருக்கின்றது.
இதைத் தாங்கியபடியே அந்த கார் சாலையில் வலம் வரும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. லேசாக நெரிசல் மிகுந்த சாலையிலேயே பொலிரோ பயணிக்கின்றது. அப்போது அது மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது. இதையே அந்த வீடியோவும் வெளிக்காட்டுகின்றது. இருப்பினும், முன்னிருக்கையில் ஒருவர் அமர வைக்கப்பட்டு இருக்கின்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அங்கு அமர்த்தப்பட்டிருக்கலாம்.
எதிரில் வரும் வாகனங்களைக் கண்டறிந்து அது தானாக வளைந்துக் கொடுத்துச் செல்வதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. போவதற்கு வழி இல்லாத சூழல்களில் அந்த கார் அப்படியே நிற்பதையும் நம்மால் காண முடிகிறது. இதேபோல், குறுக்கே இரண்டு வாகனங்கள் இருக்கும் எனில், அந்த இடைவெளியைக் கணக்கிட்டு அதற்கேற்ப அந்த வாகனம் பொறுமையாக நகர்ந்திருக்கின்றது.
இதுமாதிரியான செயல்பாடுகளை மனித தலையீடு இன்றி தன்னாட்சி தொழில்நுட்பம் வழங்கும் என்கிற காரணத்தினாலேயே பலர் இந்த அம்சம் கொண்ட கார்களை தற்போது வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். லெவல் 2 வகை அடாஸ் அம்சத்தின் வாயிலாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய கார்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த அம்சம் காரை வெள்ளைக் கோட்டுக்கு உள்ளேயே செல்ல அனுமதிக்கும். அதுதவிர, ஒவ்வொரு முறையும் திருப்பம், பிற வாகனங்களின் குறுக்கீடு மற்றும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் குறுக்கீடுகளைப் பற்றியும் அது எச்சரிக்கும். இத்தகைய அம்சத்தையே இந்தியாவில் உள்ள சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டா ரீல்ஸ் செய்யவும், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடவும் அந்த அம்சத்தை பலர் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முழுமையாக டிரைவரே இல்லாமல் இயங்கும் கார்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேவேளையில், உலக நாடுகள் சிலவற்றில் இந்த கார் கால் டாக்சி சேவையிலேயே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பயணிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை பிக்-அப் செய்வது தொடங்கி இறக்கிவிடுவது வரை என அனைத்தையும் அதுவே செய்கிறது.


Click it and Unblock the Notifications








