இது பென்ஸ் இல்லீங்கோ... இது சாட்சாத் நம்ம மஹிந்திரா பொலிரோதான்!!

பல கோடி மதிப்புடைய சொகுசு கார்கள் மீது ஆசைப்பட்டாலும், அந்த பட்ஜெட்டுக்கு பலரால் மல்லு கட்ட முடியாது. அதற்காக, தனது கனவு கார் போன்று, கையில் இருக்கும் தனது காரை மாற்றிக் கொள்வது பலரின் விருப்பமாக உள்ளது.

அவ்வாறு, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை ஒரு ஆடம்பர எஸ்யூவியாக மாற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை இங்கே காணலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் ஆடம்பர எஸ்யூவியாக மாற்றப்பட்டிருக்கும் இந்த மஹிந்திரா பொலிரோவின் சிறப்பம்சங்களையும் அப்படியே ஸ்லைடரில் காணலாம்.

 கஸ்டமைஸ் நிறுவனம்

கஸ்டமைஸ் நிறுவனம்

கேரள மாநிலம், கோட்டயம் நகரை சேர்ந்த R&T Auto catalyst என்ற நிறுவனம்தான் இந்த மாறுதல் வேலைப்பாடுகளை அழகுறவும், நுணுக்கமாகவும் செய்துள்ளது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

அரபு நாட்டில் பணிபுரியும் மூன்று நண்பர்கள் இணைந்து இந்த ஆர்டரை கொடுத்திருக்கின்றனர். பிறவியிலேயே பென்ஸ் ஜி வேகன் தோற்றத்தை மஹிந்திரா பொலிரோ அதிகம் கொண்டிருப்பதால், மாற்றுவது எளிது என்பதை முடிவு செய்துள்ளனர்.

முகப்பு

முகப்பு

முன்பக்கத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், மெர்சிடிஸ் பென்ஸ் அடையாளச் சின்னத்துடன் கூடிய க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவற்றை கொடுத்து மாற்றியிருக்கின்றனர்.

கம்பீரம்

கம்பீரம்

சைடு மிரர்கள், பெரிய விட்டம் கொண்ட சக்கரங்கள் மற்றும் சிறிய அலுமினிய சட்டங்களை கொடுத்து கம்பீரத்தை கூட்டியிருக்கின்றனர்.

பின்புறம்

பின்புறம்

பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரை கீழே எடுத்துச் சென்றுவிட்டனர். பின்புறத்திற்கு கம்பீரமான புதிய பம்பர் அமைப்பு, ஸ்பேர் வீல், டெயில் கேட் டிசைனில் மாறுதல்களை செய்திருக்கின்றனர். ரியர் வைப்பரும், கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

உயர்வகை லெதர் இருக்கைகள், மெர்சிடிஸ் பென்ஸ் சின்னம் கொம்ட ஸ்டீயரிங் வீல், கதவுகளில் பவர் விண்டோஸ் கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்றவற்றுடன் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. பழுப்பு வண்ண அப்ஹோல்டரியுடன் கவர்கிறது.

ஜி வேகன் தோற்றம்

ஜி வேகன் தோற்றம்

மொத்தத்தில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் ஆடம்பர எஸ்யூவி போன்ற தோற்றத்திற்கு மிக சிறப்பாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது இந்த மஹிந்திரா பொலிரோ.

அனைத்து வாகனங்களும்...

அனைத்து வாகனங்களும்...

இந்த வாகனத்தை கஸ்டமைஸ் செய்து கொடுத்த ஆர் அண்ட் டி ஆட்டோ கேட்டலிஸ்ட் நிறுவனம் ஆஃப்ரோடு வாகனங்களுக்கான கூடுதல் உதிரிபாகங்கள்

Source

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indians are crazy for modifying and tuning their cars. Over the past couple of years we have seen a new trend for creating replica models. Turning a Honda City into a Bugatti Veyron. Now another interesting replica building is going on. Transforming Mahindra Bolero into Mercedes Benz G Wagon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X