ரயில் மோதியும் ஒன்னும் ஆகலையா! இதுவே வேற காரா இருந்தா அப்பளம் போல நொறுங்கி இருக்கும்.. அவங்களோட தயாரிப்பா இது!

ரயில்கள் மோதி இதுவரை எந்த ஒரு காரும் பிழைச்சதா சரித்திரமே இல்லை. ரயில் மோதலின்போது ஏற்படும் தாக்கம் என்பது மிகவும் அதி பயங்கரமானதாக இருக்கும். குறிப்பாக அதற்கு முன்னால் இருப்பது எந்த மாதிரியான பொருளாக இருந்தாலும், அதை ரயில்கள் ஒரு கை பார்த்துவிடும். அப்படியே ஒரு சில கார்கள் பிழைத்திருந்தாலும்கூட அவை கடுமையான சேதங்களுடனேயே பிழைத்திருக்கக்கூடும்.

ஆனால், இந்த விதியை நம்முடைய இந்திய தயாரிப்பு கார் ஒன்று மாற்றி இருக்கின்றது. அதிக வேகத்தில் வந்த ரயில் மோதிய பின்னரும் அந்த காருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக விபத்தில் சிக்கிய காரின் படங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி இருக்கின்றன. இந்த சம்பவம் அரங்கேறி கடந்த சில வாரங்கள் ஆகின்றன.

Bolero neo drags by train

இந்த நிலையிலேயே விபத்துக்குள்ளான கார்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கின்றது. காரின் உறுதித் தன்மையைக் கண்டு வியந்துபோன கார் காதலர்கள் அந்த காரை போற்றி புகழ்பாடத் தொடங்கி இருக்கின்றனர். அப்படி என்ன கார் அது? அதன் விலை எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் பொலிரோ நியோவும் ஒன்றாகும். இந்த காரே ரயில் விபத்தில் சிக்கி பிழைத்த கார் மாடல் ஆகும். கூட்ஸ் ரயில் உடனேயே இந்த கார் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த காரை ரயில் மோதியதோடு இல்லாமல் சுமார் 30 மீட்டர் தூரம் அதை இழுத்துச் சென்றிருக்கின்றது.

Mahindra bolero goods train accident video

இருப்பினும், அந்த காரோ கணிசமான அளவே சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த கார் ஆர்வலர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த சம்பவம் ஒடிசா மாநிலம், பிரதிப் துறைமுகம் அருகிலேயே அரங்கேறி இருக்கின்றது. துறைமுகம் பகுதி என்பதால் குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே அந்த கூட்ஸ் ரயில் வந்திருக்கின்றது.

இதனாலேயே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், அந்த காரில் மிக சிறிய அளவு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிசயிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. மேலும், 30 மீட்டர் இடைவெளிக்கு அந்த கார் இழுத்து செல்லப்பட்ட போதிலும் காரின் வீல் மற்றும் டயரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இவை அனைத்தும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தரமானவை என்பதற்கு சான்றாக அமைந்திருக்கின்றது. ரயில் மோதியதில் காரின் ஒரு பக்க கதவு மற்றும் சைடு பேனல்கள் மட்டுமே சேதமடைந்திருக்கின்றன. ரயில் வருவதை அறியாமல் அஜாக்ரதையாக பொலிரோ நியோ கார் ரயில் கிராஷிங்கை கடந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

அதிர்ஷ்டவசமாக காருக்குள் வந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கின்றனர். சிறு காயங்கள்கூட இல்லாமல் இந்த கார் பயணிகளைப் பாதுகாத்து இருக்கின்றது. பயணிகளைப் போலவே காரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று ரயில் கிராஷிங்கில் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது முதல் முறையல்ல. ஆனால், விபத்தைச் சந்தித்த பின்னரும் வாகனம் பத்திரமாக மீட்கப்படுவது அரிதினும் அரிதாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையிலேயே மஹிந்திரா பொலிரோ நியோ விபத்து சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 9.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரை பயணிகள் வாகனமாக மட்டுமல்ல ஆம்புலன்ஸாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மோட்டார் தேர்விலேயே பொலிரோ நியோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார் 94 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் எனும் இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் மோதி பிழைச்சிருப்பதாலேயே இந்த கார் பற்றிய தகவல் தற்போது மீண்டும் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. இந்த சம்பவம் அரங்கேறி ஏறத்தாழ ஒரு மாதம் இருக்கின்ற நிலையிலேயே ரயில், மஹிந்திரா கார் விபத்து சம்பவம் பேசு பொருளாகி உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 7, 2023, 15:18 [IST]
English summary
Mahindra bolero neo mets accident with goods train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+