தலைப்பாகை கட்டிட்டு சாதாரணமா காரு பக்கத்துல நிக்கிறாருனு லேசா எடை போட்றாதீங்க! இவர பாத்தா ஒரு கூட்டமே அலறும்!
இந்தியர்கள் மத்தியில் புதிதாக ஓர் கார் மாடல் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தயாரிப்பு இல்லைங்க. மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்இவி 9இ (XEV 9e) கார் மாடலே அது ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Electric SUV Car) மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
குறிப்பாக, பிரபலங்கள் பலரும் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பிரபலங்கள் மட்டுமல்ல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்தோரும் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், மஹிந்திரா குழும நிர்வாகக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் வினோத்-ம் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார்.

வினோத் சஹாய் இந்த பொருப்பில் மட்டுமல்ல பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நபரே தன்னுடைய மனைவியும் ஒன்றாக சேர்ந்து சென்றே மஹிந்திரா இ-காரை டெலிவரி பெற்றிருக்கின்றனர். பார்க்க இவர் சற்றே சாதாரணமா தெரியலாம். ஆனால், அவர் கொஞ்சம் ஸ்டிரிட்டான ஆஃபிசர் என கூறப்படுகின்றது. எனவே இவரை பார்த்தாலே ஸ்டாஃப்கள் சிலர் மிரளுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய நபரே மாஹிந்திரா எக்ஸ்இவி 9இ காருக்கு அருகில் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு மிகவும் சாதுவாக நின்று தற்போது போஸ் கொடுத்திருக்கின்றார். உலக தரத்திற்கு இணையாகவே இந்த காரை மஹிந்திரா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதன் விளைவாகவே இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக, பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருடன் சேர்த்து பிஇ 6 (BE 6) மின்சார காரையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும் எஸ்யூவி ரக கார் மாடலே ஆகும். எக்ஸ்இவி 9இ-யைக் காட்டிலும் சற்றே சிறிய உருவம் கொண்ட மின்சார காராக இதனை மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது.
இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ இரண்டும் தோற்றத்தில் வேறுபட்டு காட்சியளித்தாலும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்த காரிலும் 59 kWh மற்றும் 79 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

முதல் பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இன்றைய நிலவரப்படி ரியர் வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. விரைவில் அனைத்து வீல்களும் இயக்கம் கொண்ட ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாகவே வினோத் சாஹே இந்த காரை வாங்கிய நிகழ்வு அமைந்திருக்கின்றது. விரைவில் இவரை போல இன்னும் பல பிரபலங்கள் இந்த காரை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









