மஹிந்திரா கொமோடோ கான்செப்ட்... குடும்பத்தினருக்கான ஆஃப்ரோடு எஸ்யூவி!

இத்தாலியின் பிரபல ஐஇடி டிசைன் பள்ளியில் பயின்ற இந்திய இளம் டிசைனர் மக்ரந்த் பாட்டீல் புதிய ஆஃப் ரோடு எஸ்யூவி கான்செப்ட்டை வடிவமைத்து அசத்தியுள்ளார். மஹிந்திரா கொமோடோ என்ற பெயரிலான வாகனத்தை இந்திய சாலை மற்றும் நில அமைப்பை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மிரட்டலான இந்த புதிய எஸ்யூவி கான்செப்ட் மஹிந்திராவின் டிசைன் தாத்பரியங்களையும் மனதில் வைத்து வடிவமைத்துள்ளதாகவும், இது மஹிந்திரா பிராண்டுக்கு பொருத்தமான மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புதிய மஹிந்திரா கொமோடோ கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பல சுவையான ஆட்டோமொபைல் செய்திகளுக்கு எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்!

 டிசைன் தாத்பரியம்

டிசைன் தாத்பரியம்

பெரிய, வலுவான, மிரட்டலான தோற்றத்துடன் ஓர் சொகுசான ஒரு ஆஃப் ரோடு வாகனத்தை மனதில் கொண்டு இந்த புதிய கான்செப்ட்டை வடிவமைத்ததாக மக்ரந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் என்ஜாய்

குடும்பத்தினருடன் என்ஜாய்

சாகச விரும்பிகள், ஆஃப் ரோடு பயண விரும்பிகள் மட்டுமின்றி, குடும்பத்தினருடன் ஆஃப் ரோடு அனுபவங்களை பெறுவதற்கான வசதிகள் மற்றும் சொகுசான அம்சங்கள் இருப்பதால், காரில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் தரும் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இது இந்தியாவின் அனைத்து விதமான சாலை அமைப்புகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். நெடுஞ்சாலை, மலைப்பாங்கான சாலைகள், கரடு முரடான சாலைகள் மற்றும் சேறுசகதி நிறைந்த சாலைகள் உள்பட அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

 டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆல் டெர்ரெய்ன் டயர்கள், உட்புறத்தில் நீர் புகாதவாறான கட்டமைப்பு மற்றும் சிறப்பு சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவியின் குறிப்பிடத்தக்க டிசைன் அம்சங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

அனைத்து சாலைகளுக்கும் ஏற்ற விதத்தில், இந்த எஸ்யூவி 4 வீல் டிரைவ் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2014, 11:49 [IST]
English summary
Mahindra has revealed their latest concept coded ‘Komodo', which is designed by Makrand Patil. This new concept will attract youth and even middle aged people, sports enthusiasts and families too. The car will have strong stance, it will be big and strong, as well as luxurious.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+