புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

எம்ஜி நிறுவனத்தின் புத்தம் புதிய ஹெக்டர் காரைப் போலவே மஹிந்திரா நிறவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான கேயூவி100 சிறிய ரக எஸ்யூவி கார் தீ விபத்தில் சிக்கி நாசமாகியுள்ளது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

புதிதாக இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப் போடு போட்டிக் கொண்டிருக்கும் எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மாடலான ஹெக்டர் எஸ்யூவி ரக கார் அண்மையில் தீயில் கருகி நாசமாகியது.

இந்த கார் எப்படி தீ விபத்தில் சிக்கியது என்பதுகுறித்த தகவல் சமீபத்திலேயே வெளியுலகிற்கு தெரியவந்தது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

இந்த சம்பவத்தின் வெப்பமே இன்னும் மறையாத நிலையில், புதிய தீ விபத்துகுறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய (ஜனவரி 27) தினம் ஹிமாச்சல பிரதேசத்தில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் கேயூவி100 கார்தான் இந்த தீ விபத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணித்த தம்பதிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு காயமுமின்றி தப்பியுள்ளனர்.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

ஷிம்லாவைச் சேர்ந்த கவுரவ் சிங் மற்றும் சுனில் தத் என்ற தம்பதிகள் ஹிமாச்சலத்தை நோக்கி பயணிக்கும் போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் குலு மாவட்டத்தில் உள்ள அணி என்ற பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும்போது காரின் எஞ்ஜின்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேற ஆரம்பித்தது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

இதனைக் கண்டு அதிர்ந்துபோன தம்பதியினர் உடனடியாக காரை விட்டு வெளியேறினர். அவர்கள் இறங்கிய சில விநாடிகளிலேயே எஞ்ஜினில் இருந்து தீ பிழம்பு வெளியேற ஆரம்பித்து. அது மலமலவென பரவி காரின் எஞ்ஜின் பகுதியை பதம் பார்க்க ஆரம்பித்தது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

தொடர்ந்து, எஞ்ஜினில் பிடித்த தீ முன்னிருக்கை மற்றும் காரின் அனைத்து பகுதியிலும் பரவி அதற்கு இரையாக்கியது. இதனால், கார் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடாக மாறியது.

அதிர்ஷ்டவசமாக முன்னதாகவே சுதாரித்துக் கொண்டு காரை விட்டு வெளியேறியதன் காரணத்தினால் தம்பதிகள் இருவரும் சிறு காயமுமின்றி தப்பினர்.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

திடீரென காரில் எவ்வாறு தீ பிடித்தது என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. வாகனத்தின் உரிமையாளருக்கும் அதுகுறித்த அறியாத வண்ணமே இருக்கின்றது.

சம்பவம்குறித்து கேயூவி 100 காரின் உரிமையாளரான கவுரவ் சிங்க் மற்றும் அவரது மனைவி சுனில் தத் அளித்த தகவலின் பேரில் வந்த போலீஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் வருவதற்குள்ளாக தீ முழுவதுமாக பரவி கார் எரிந்து நாசமாகியதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

தற்போது தீ விபத்தில் சிக்கியிருக்கும் கேயூவி 100 காரின் வடிவமைப்பில்தான் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

ஆகையால், விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த குறைந்த சிறிய ரக எஸ்யூவி கார் எரிபொருள் தேர்வு மட்டுமல்லாமல் மின் மோட்டார் தேர்விலும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

மஹிந்திரா நிறுவனம், இந்த இ கேயூவி100 என்றழைக்கப்படும் மின்சார காரை மிகவும் சவாலான விலையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கூறியதாவது, "எலெக்ட்ரிக் கார் சந்தையின் போக்கை மாற்றும் வகையில் ரூ. 9 லட்சத்திற்குள் புதிய மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

பவன் கோயங்காவின் இந்த கூற்றின்படி, மஹிந்திரா இ கேயூவி 100 மாடல் எலெக்ட்ரிக் கார் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இந்திய மின்சார வாகன சந்தையில் இந்த கார் தரமான சம்பவத்தை நிகழ்த்தும் என்றும் கூறப்படுகின்றது.

புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...!

மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தற்போது தீ விபத்து சிக்கியிருக்கும் கேயூவி 100 எஸ்யூவி காருக்கும் கணிசமான டிமாண்ட் இந்திய சந்தையில் நிலவி வருகின்றது. இதற்கு கருப்பு புள்ளி ஏற்படுத்தும் விதமாக இந்த திடீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2020, 8:38 [IST]
English summary
Mahindra KUV 100 Caught Fire In Himachal Pradesh. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+