இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்க மஹிந்திரா திட்டம்

Written By:

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சிறிய ரக விமானத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வாகன தயாரிப்பு துறையில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், எஸ்யூவி வகை கார்கள், கனரக வாகனஙகள், டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் தயாரிப்பில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் விமான தயாரிப்பு மற்றும் உதிரிபாக தயாரிப்புத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ என்ற விமான தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. அந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் GA8 Airvan என்ற சிறிய வகை விமான மாடலை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

ஏற்கனவே 220 GA8 Airvan விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் 30 நாடுகளில் இந்த விமானங்கள் பயன்பாட்டிலும் உள்ளன. இந்த நிலையில், இந்த விமானத்தை இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.பி.சுக்லா தெரிவித்துள்ளார்.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

இந்த விமானத்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனுமதி கிடைத்தால் உடனடியாக இந்த விமானத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

அதேநேரத்தில், இந்த விமானத்திற்கு அனுமதி கிடைப்பதில் இந்திய விமான போக்குவரத்து விதிகளின்படி சில நடைமுறை பிரச்னைகள் இருக்கின்றன. அதாவது, 1,500 கிலோ எடைக்கும் அதிகமான விமான மாடல்கள் இரண்டு பைலட்டுகள் இயக்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

ஆனால், இந்த விமானம் ஒரு பைலட்டை மட்டுமே வைத்து இயக்கும் வசதி கொண்டது. எனவே, இதுதொடர்பாக, தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சுக்லா தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தங்களது விமானத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இங்கேயே இந்த விமானத்தை தயாரிக்கவும் திட்டம் உள்ளதாக அவர் கூறினார்.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

ஆஸ்திரேலியாவில் தயாரிப்பதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவின் விமான போக்குவரத்து ஆணையத்திற்கும் அமெரிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து ஆணையங்களுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மூலமாக இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி இருக்கிறது.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

எனவேதான் அங்கேயே தயாரிக்கும் கட்டாய நிலை உள்ளது. மேலும், ஜிப்ஸ்ஏரோ விமானங்களுக்கான உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள எங்களுடைய ஆலையிலிருந்துதான் தயாரித்து அனுப்பப்படுகின்றன. எனவே, இங்கு விதிமுறைகள் சாதகமானால் நிச்சயம் இங்கேயே தயாரிக்க முடியும்," என்றார்.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

இதனிடையே, கிப்ஸ்ஏரோ ஜிஏ8 ஏர்வேன் விமானத்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு இரண்டு பைலட்டுகளுக்கு ஏற்றவாறு காக்பிட்டில் மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும். அந்த மாறுதல்களுக்கு அனுமதி கிடைத்தால், இந்த ஆண்டு இறுதியில் இந்த விமானம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

மேலும், கிப்ஸ்ஏரோ நிறுவனத்துடன் இணைந்து ஏர்வேன் 10 என்ற மாடலை மஹிந்திரா தயாரித்து வருகிறது. இந்த விமானத்தில் 10 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். இந்த விமானத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திராவிடம் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil language: Mahindra Plans To start plane sales in India this year.
Story first published: Friday, September 2, 2016, 17:16 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark