சட்டத்தை கையில் எடுத்த மக்கள்... 15 லட்ச ரூபாய் கார் மொத்தமாக காலி!! காரணத்தை கேட்டால் நீங்களே கோபப்படுவீங்க!
அப்போதில் இருந்து இப்போது வரையில் மக்களிடையே மாறாத விஷயங்களுள் ஒன்று விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தை அடித்து கிழிக்க வேண்டும் என்பது. ஏரியா பெரிய ஆளுடைய வாகனம் என்றால் சிலர் அடைக்கி வாசிப்பர். அதுவே, யார் எவரென்றே தெரியாதவர்களின் வாகனம் என்றால், அன்னைக்கு சரியான சம்பவம் இருக்கும். அந்த வகையில், இங்கு ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) காரை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். பின்னர் அந்த கார் மக்களின் தாக்குதலினால் என்ன ஆகியது என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
உலகளவில் சாலை விபத்துகளில் நம் இந்தியா முன்னிலையில் உள்ளது. கேட்க கசப்பாக இருந்தாலும், நம்மில் நிறைய பேருக்கு இன்னும் சாலையில் எவ்வாறு வாகனம் ஓட்ட வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, அதிவேக பயணம் ஆனது மற்ற நாட்டு இளைஞர்களை போல், நம் நாட்டு இளைஞர்கள் பலரது மனதிலும் ஊறிப்போய் உள்ளது.

வாகனத்தை எடுத்தாலே உடனே டாப் கியரில் செல்ல வேண்டும் என நினைப்போரும் இருக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் நிறைய குறுகிய சாலைகளில் அதிகப்பட்ச வேகமே 50kmph தான் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அத்தகைய டிரைவர்களுள் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் கிராமம் ஒன்றினுள் அதிவேகமாக சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கண்ட சுற்றியிருந்த மக்கள் காரையும், டிரைவரையும் மடக்கி பிடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். குறிப்பாக, கார் முற்றிலுமாக அடித்து துவம்சம் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ரோர்கி என்கிற பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அதிவேகமாக சென்ற கார் ஓர் குறுகிய வளைவில் அதே வேகத்தில் திரும்ப முயற்சித்துள்ளது. அந்த நேரம் பார்த்து எதிரே ஒரு மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. எதிரே பைக் வருவதை பார்த்த போதிலும் டிரைவரால் காரை நிறுத்த முடியவில்லை; பைக் மீது மோதிவிட்டது. காரை நிறுத்தும் முயற்சியில் காரின் கண்ட்ரோலை டிரைவர் இழக்க, அருகே இருந்த கடையினுள் கார் பாய்ந்தது.
இதற்கிடையில், இடையே சாலையில் சென்ற மக்களை பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற கார், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை இடித்து தள்ளியப்படி கடையினுள் பாய்ந்துள்ளது. ஓவர் ஸ்பீடில் குறுகிய வளைவில் திரும்பிய போதே காரின் பாதி கண்ட்ரோலை டிரைவர் இழந்துவிட்டார். இந்த மோதலில், பைக்கில் சென்ற பிரகாஷ் என்பவர் பலத்த காயங்களை சந்தித்துள்ளார்.

பைக் மீது அதிவேகத்தில் கார் மோதும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. விபத்திற்கு பின், காரில் இருந்தவர்களுக்கும், விபத்து நடைபெற்ற இடத்தின் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அது கைகலப்பாகி உள்ளது. பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் கோபத்தின் உச்சியில் தகதகவென அனலாக கொதித்து கொண்டிருந்தனர்.
கோபத்தில் விபத்திற்கு காரணமான காரில் இருந்தவர்களை வெளுத்து வாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் காரையும் கட்டை, இரும்பி கம்பி மற்றும் சுத்தியல்களால் அடித்து நெருக்கியுள்ளனர். காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. காரை சுற்றிலும் இருந்த விளக்குகளையும் அடித்து நொறுக்கினர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பொது மக்களை கலைந்து போக செய்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்தில் சிக்கியதை காட்டிலும், கோபத்தில் இருந்த பொது மக்களிடம் சிக்கியதில்தான் இந்த கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் பலத்த சேதாரங்களை சந்தித்துள்ளது. இதனை சரிச்செய்ய நிச்சயமாக பல இலட்சக்கணக்கில் செலவாகும். இதை பார்த்தாவது அதிவேகமாக செல்பவர்கள் திருந்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









