பழைய ஸ்கார்பியோ கார்கள் தான் வேண்டும்!! மஹிந்திராவிடம் அடம்பிடித்து கேட்டு வாங்கும் இந்திய இராணுவம்!
இந்திய இராணுவத்தினர் தங்களது பயன்பாட்டிற்காக மார்க்கெட்டில் பிரபலமான மஹிந்திரா பிராண்ட் கார் ஒன்றை அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மஹிந்திராவின் எந்த கார் அது? குறிப்பாக அந்த மாடலை தேர்வு செய்யும் அளவிற்கு அதில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்திய இராணுவ துறைக்கு கடந்த காலங்களில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பல்வேறு வாகனங்கள் சென்றுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கைகளில் வாகனங்களை இந்திய இராணுவ துறையினர் பெற்றுள்ளனர். இவ்வாறு பெறப்படும் வாகனங்கள் பெரும்பாலும் ரோந்து பணிகளுக்காகவும், இராணுவ மற்றும் இதர அதிகாரிகளின் போக்குவரத்துக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன.

இந்த வகையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சுமார் 1,850 ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) கார்களை இந்திய இராணுவம் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் இந்திய இராணுவ துறைக்கும், மஹிந்திரா நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. இதனை மஹிந்திரா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆனால், மஹிந்திராவின் இதுகுறித்த டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டுள்ள அடர் பச்சை நிற ஸ்கார்பியோ கார்களின் படம் பழையது ஆகும். அதாவது, படத்தில் காட்சி தரும் தோற்றத்தில் தற்சமயம் ஸ்கார்பியோ கார்கள் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இன்னும் சொல்லப் போனால், வெறும் 'ஸ்கார்பியோ' என்ற பெயரில் எந்த வாகனத்தையும் மஹிந்திரா இப்போது உற்பத்தி செய்வது இல்லை.
ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என ஸ்கார்பியோ கார்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஸ்கார்பியோ என் ஆனது முன்பு விற்பனையில் இருந்த ஸ்கார்பியோ காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சன் ஆகும். அதாவது, பழைய ஸ்கார்பியோவுக்கும், ஸ்கார்பியோ என் காருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இருப்பினும், பழைய ஸ்கார்பியோ காருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பயன்படுத்தாமல் விடக்கூடாது என்பதற்காக மஹிந்திரா அறிமுகப்படுத்திய காரே ஸ்கார்பியோ கிளாசிக் ஆகும். அதாவது, பழைய ஸ்கார்பியோவும், ஸ்கார்பியோ கிளாசிக்கும் தோற்றத்தில் ஒன்றே. மிகவும் நுணுக்கமான வித்தியாசங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டது. இந்த ஸ்கார்பியோ கிளாசிக் காரையே 1,850 யூனிட்கள் இந்திய இராணுவம் ஆர்டர் செய்துள்ளது.

இதனால் மஹிந்திராவின் லேட்டஸ்ட் லோகோ உடன் ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் இந்திய இராணுவத்தை சென்றடைய உள்ளன. ஆனால் வழக்கமான மேட் கேமோ பச்சை நிறத்தில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக ஸ்கார்பியோ கிளாசிக் காரில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 132 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இராணுவத்தினரின் பணி எத்தகைய கடினமானது என்பதை நான் கூற வேண்டியதில்லை. சகதி மற்றும் பாறைக்கற்கள் மிகுந்த ஆஃப்-ரோட்டிற்கு அவ்வப்போது காரை கொண்டு செல்ல வேண்டி இருக்கலாம். ஆதலால், இராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்களில் என்ஜின் ஆற்றல் அனைத்து 4 சக்கரங்களுக்கும் செல்லும் வகையில் 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








