குழந்தைகள் சென்ற பஸ் மீது மோதிய கார்! ஓட்னது யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க! போலீஸ் செஞ்சதுதான் உச்சகட்ட மாஸ்!
இந்திய சாலைகளில் தினமும் பல ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் (Road Accidents) நிகழ்ந்து வருகின்றன. இதில் ஒரு சில சம்பவங்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் (CCTV Cameras) பதிவாகி விடுகின்றன. அந்த வைரல் வீடியோக்கள் (Viral Videos), காண்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன.
இந்த வரிசையில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பஸ் ஒன்று சாலையில் திடீரென யூ-டர்ன் எடுக்க முயல்வதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் ஒன்று, அதிவேகத்தில் வருகிறது.

பஸ் திடீரென யூ-டர்ன் எடுக்க முயன்றதால், அந்த காரின் டிரைவர் தடுமாறி விட்டார். அதிவேகத்தில் வந்த காரணத்தால், அவரால் காரை கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே பஸ் மீது மோதி, மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் நம்மால் காண முடிகிறது.
விபத்தில் சிக்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு உள்ளே 3 பேர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 3 பேரும் உயிர் தப்பி விட்டனர். எனினும் 3 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விபத்திற்கு பின் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது. இங்கே அதிர்ச்சிகரமான மற்றொரு விஷயம் என்னவென்றால், காரை ஓட்டியவர் உள்பட காருக்கு உள்ளே இருந்த 3 பேருமே மைனர்கள்தான் (Minors). எனவே உரிய வயதை எட்டுவதற்கு முன்பே கார் ஓட்ட அனுமதித்ததற்காக, காரை ஓட்டிய மைனர் டிரைவரின் தந்தை மீது காவல் துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் அந்த மைனர் டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, காவல் துறையினரின் வழக்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள தந்தைதான் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் ஆவார். மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) 3,4,5 மற்றும் 181 ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர ஐபிசி (IPC) செக்ஸன் 279 மற்றும் 338 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வமாக வாகனங்களை ஓட்ட வேண்டுமென்றால் (Legal Driving Age), 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதன்பின் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெற்றுதான் வாகனங்களை ஓட்ட முடியும்.
ஆனால் தங்கள் குழந்தைகள் உரிய வயதை எட்டுவதற்கு முன்பாகவே ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர். இதன் காரணமாகவும் நிறைய சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது காவல் துறையினர் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும் இந்த தவறுகள் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. ஒரு சில இடங்களில் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை கூட வழங்கப்பட்டு விட்டது. எனினும் பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தால், இதுபோன்ற தவறுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையான ஒரு விஷயம்தான்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், யூ-டர்ன் எடுக்க முயன்ற பஸ்ஸில் பள்ளி குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றிருந்தால், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உரிய வயதை எட்டுவதற்கு முன்னால், உங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். என் மகன்/மகள் தற்போதே எப்படி வாகனம் ஓட்டுகிறான்/ஓட்டுகிறாள் என்று மற்றவர்களிடம் பெருமை பேசுவது ஆபத்தை ஏற்படுத்தலாம். உரிய வயதை எட்டி டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு வாகனம் ஓட்டுவதை மட்டும் ஊக்குவியுங்கள்.


Click it and Unblock the Notifications








