டிவைடரில் மோதி காற்றில் பறந்த மஹிந்திரா ஸ்கார்பியோ... அதிரவைக்கும் சிசிடிவி காட்சி..!
அதிவேகத்தில் வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் டிவைடரின்மீது மோதி காற்றில் பறக்கும் அதிர்ச்சிமிகுந்த சிசிடிவி வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

உலகிலேயே இந்தியாவின் நெடுஞ்சாலைகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப வகையில், உலகளவில் இந்தியாவில் உள்ள சாலைகளே அதிகளவு ஆபத்து நிறைந்தவையாக காட்சியளிக்கின்றன.

முக்கியமாக, தரமற்ற சாலை மற்றும் குறைபாடான போக்குவரத்து வசதிகளின் காரணமாகவே விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
ஆனால், போக்குவரத்து விதிமீறல்களினாலேயே அதிகளவு விபத்துகள் நடைபெறுவதாக அத்துறைச்சார்ந்த அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ, அதிக விபத்து மற்றும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. இதனால், அதிகம் விபத்து மற்றும் உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் முதன்மை இடத்தை பிடித்துவிடலாம் என புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய மற்றும் நெடுஞ்சாலைகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முறையான போக்குவரத்து வசதியின்மையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதனை எடுத்துரைக்கும் வகையில் புதிய விபத்துகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறியது குஜராத்தில் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த காட்சியை நீங்கள் கீழே காணலாம்...
குஜராத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ஜுனகத் நெடுஞ்சாலையிலேயே இந்த அதிர்ச்சி மிகுந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சிசிடிவியில், அதிகவேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் டிவைடர் மீது மோதி, காற்றில் பறப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து, காற்றில் பறக்கும் அந்த கார் சாலையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தலையை இடித்தவாறு சாலையில் விழுவதையும் நம்மால் காண முடிகின்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இந்த விபத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ அதிகவேகமாக வந்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இருப்பினும், மறுபுறம் அந்த எஸ்யூவி ரக கார் வந்த பாதையில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் ஓர் காரணம் எனகூறப்படுகின்றது.

சீரமைப்பு பணியின் காரணமாக அங்கு மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இதனையறியாமல் அதிக வேகத்தில் வந்த ஸ்கார்பியோ, பிரேக்கை பிடிக்காமல் டிவைடரின்மீது மோதி காற்றில் பறந்தது. அப்போது, மற்றுமொரு ஸ்கார்பியோவிற்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கு மேலே எழும்பிய அந்த கார், அவர்களின் மீதே அமர்ந்தவாறு தரையை அடைந்து விபத்தைச் சந்தித்தது.

ஆகையால், பாதை தடை செய்யப்பட்டிருப்பதை விளக்கும் வகையில் தடுப்புகள் அல்லது பேரிகேட்டுகள் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இவை அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி வாசிகள் வருத்தம் தெரிவித்தனர்.

பொதுவாக சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெறுமேயானால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்ற வகையில் பதாகைகள் அல்லது வேக தடுப்புகள் நிறுவப்படுவது வழக்கம்.
ஆனால், குஜராத்தில் நெடுஞ்சாலையில் இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையையும் போக்குவரத்துத்துறையினர் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவாக இரு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

நாம் ஏற்கனவே கூறியதைப் போன்றே இந்திய நெடுஞ்சாலைகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இதனை விளக்கின்றவகையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக இந்திய சாலைகளில் இதுபோன்ற தடைகள் இருப்பது வழக்கம்தான். இதன்காரணமாகவே, வாகன ஓட்டிகள் எப்போதும் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, ஜே வால்கர் எனப்படும் பாதசாரிகள் மற்றும் கால்நடைகளாலும் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. இதில் எந்தவொரு தீர்வையும் எட்டமுடியாத நிலைதான் போக்குவரத்துத்துறை தவித்து வருகின்றது. சில சமயங்களில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினாலும் இதுபோன்ற விபத்துகள் அரங்கேறி வருகின்றன.

ஆகையால், குறிப்பிட்ட வேகத்தில் சென்று, நம்முடைய பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். இது, நமக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் நன்மையையே விளைவிக்கும்.


Click it and Unblock the Notifications








