120 கி.மீ வேகத்தில் சென்று புரண்ட கார்! அசால்டாக உயிர் தப்பிய ஓட்டுநர்! கார் பில்டு குவாலிட்டி அப்படி!

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் 120 கி.மீ வேகத்தில் வந்து விபத்தில் சிக்கிய போதும் அதில் பயணித்த பயணி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பிரவி வருகிறது. எப்படி விபத்து நடந்தது என அவரே சமூகவலைத்தளங்களில் எழுதிய பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் இந்தியா முழுவதும் பிரபலமான காராக மாறி வருகிறது. இந்த காரின் கட்டுமானம், பவர்ஃபுல்லான இன்ஜின், ரோடு பிரெசன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதன் விற்பனைக்கு அதிக காரணம். இந்த கார் அதன் உரிமையாளர் உயிரையே சமீபத்தில் ஒரு சம்பவத்தில் காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 120 கி.மீ வேகத்தில் வந்த கார் விபத்தில் சிக்கியதில் சிறு காயங்களுடன் அதன் உரிமையாளர் உயிர் தப்பியுள்ளார்.

mahindra scorpio n accident

இந்த சம்பவம் கூர்கான் பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த புகைப்படம் மற்றும் விளக்கத்தை அவர் ரெட்டிட் தளத்தி்ல பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட புகைப்படத்தில் வாகனத்தின் பக்கவாட்டு பேன்ல்கள் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. முன்-பின்பக்க பம்பர்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன. சேஸிஸ் பகுதியும் சேதமாகியுள்ளது.

இந்த சம்பவம் நடக்கும் போது வாகனம் 120 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது. இரவு நேரம் விபத்து நடந்துள்ளது. விசிபிளிட்டி குறைவாக இருந்துள்ளது. அந்த பகுதியில் சாலை பணிகள் நடந்துவந்துள்ளது. இந்நிலையில் விசிபிளிட்டி குறைவாக இருப்பதால் அவரால் சாலை பணிகள் நடப்பதை குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் போதே கவனிக்க முடியவில்லை.

mahindra scorpio n accident

இது அவரது கண்ணுக்கு தெரிந்தவுடன் கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் அவரால் கண்ட்ரோல் செய்ய முடியுவில்லை. வாகனத்தை திருப்பும் போது அது புரண்டு தலை குப்புற கவிழ்ந்தது அருகில் இருந்த கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்தது. இவர் வேகமாக வரும் போது சாலை பணிகள் நடக்கிறது என்பதை குறிக்கும் வகையில் எந்த விதமான எச்சரிக்கை பலகையும் இல்லை. அதே நேரம் இரவு நேரத்தில் அங்கு போதிய வெளிச்சமும் இல்லாமல் இருந்துள்ளது.

120 கி.மீ வேகத்தில் வந்து வாகனம் விபத்தில் சிக்கினாலும் வாகனத்தில் இருந்த பயணிகளுக்கு குறைவான காயங்களே ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் ஏர்பேக்குகள் வெளியே வந்துள்ளன. வாகனத்தின் பல்லர்கள் ஸ்டிராங்காக இருந்துள்ளது. இதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்த காரின் பில்டு குவாலிட்டி தான் இவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளது.

mahindra scorpio n accident

இந்த புகைப்படம் மற்றும் இந்த செய்தி பெரும் அளிவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வேகத்தில் கார் பயணித்தும் எப்படி இவ்வளவு குறைவான பாதிப்பு வந்தது? இதனால் அந்த அளவிற்கு வாகனத்தின் கட்டுமானம் சிறப்பாக இருக்கிறதா என பலர் ஒரு பக்கம் பேசி வருகின்றனர். மற்றொரு பக்கம் சர்வீஸ் ரோட்டில் 120 கி.மீ வேகத்தில் போதுமான விசிபிளிட்டி இல்லாத நேரத்தில் ஒருவர் ஏன் பயணிக்க வேண்டும் என பேசி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்க முக்கியமான காரணம் அதிக வேகத்தில் வாகனத்தில் பயணித்தது தான். 120 கி.மீ வேகம் இந்தியாவில் எந்தசாலையிலும் அனுமதியில்லாத வேகம் ஆகும். அடுத்ததாக சாலையில் பணி நடப்பது குறித்து போதிய விழிப்புணர்வு பலகைகள் வைக்காமல் இருந்தது. அது இருந்தாலாவது வாகனத்தின் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் எக்காரணத்தை கொண்டு அதிக வேகத்தில் பயணிக்காதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 14, 2025, 18:57 [IST]
English summary
Mahindra scorpio n accident saved owner life know full story
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X