ஸ்கார்பியோவின் முகத்தை காலி செய்த டாடா கார்.. டாடா எம்பளத்துக்குகூட ஒன்னும் ஆகல.. இவ்ளோ ஸ்ட்ராங்கான காரா இது!
பாதுகாப்பிற்கு பெயர்போனவையாக டாடா கார் (Tata Car)-கள் இருக்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு தயாரிப்புகள் இல்லைங்க, நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்தவையாகக் காட்சியளிக்கின்றன. இதற்கு சான்றாக பல்வேறு விபத்து சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இப்போதும் ஓர் நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இங்கே பார்க்க இருக்கின்றோம். டாடா கார் ஒன்று வேறொரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்புடன் விபத்தில் சிக்கியும் அதற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய படங்களும், வீடியோக்களுமே தற்போது வெளியாகி இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ன் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான ஹாரியர் (Harrier) கார் மாடலும், மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio-N) கார் மாடலும்தான் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியிருக்கின்றன. இரண்டு பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றிற்கு சளைத்தது அல்ல.

சொல்லப்போனால் இரண்டு கார்களும் பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றவை ஆகும். ஆனால், டாடா ஹாரியரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே இந்த ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதன் புதுப்பிக்கப்படாத வெர்ஷனின் பாதுகாப்பு தரம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், டாடாவின் இந்த தயாரிப்பு மிகுந்த பாதுகாப்பு திறன்மிக்கதாகவே கருதப்படுகின்றது.
இத்தகைய காரே, இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலான ஸ்காரிபியோவுடன் நேருக்கு நேர் மோதியிருக்கின்றது. இந்த மோதலில் டாடா காரை விட ஸ்கார்பியோ காருக்கே மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், டாடா ஹாரியர் காரும் விபத்தினால் பாதிப்படைந்திருக்கின்றது. ஆனால், ஸ்கார்பியோ உடன் ஒப்பிடுகையில் அதன் பாதிப்புகள் மிகவும் குறைவானதாக உள்ளது.

ஸ்கார்பியோ காரின் ஒரு பக்கமே முழுமையாக சிதைந்திருக்க, டாடா ஹாரியரின் மையப்பகுதி மட்டும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. குறிப்பாக, பான்னெட் மெலே எழும்பியும், கிரில் சற்றே நசுங்கியும் காணப்படுகின்றது. அதேவேளையில், அதன் கிரில்லில் பொருத்தப்பட்டு இருக்கும் டாடா எம்பளத்திற்குகூட எதுவுமே ஆகாமல் இருக்கின்றது.
இதுவே பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஒரு பக்க ஹெட்லைட், பான்னெட், க்ரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை விபத்தால் முற்றிலுமாக சேதமாகி இருக்கின்றது. இதனால் இந்த காரை பாதுகாப்பற்றது என்று கூறிவிட முடியாது. அது ஒரு பக்கமாக மோதியிருப்பதனாலேயே இந்த அளவிற்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஸ்கார்பியோ சந்தித்து உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே ஸ்கார்பியோ என் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. டாடா ஹாரியர் பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் 5க்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. இரண்டும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும்.
இந்த இரண்டு கார்களுக்கும் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஸ்கார்பியோ என் கார் மாடலுக்கு டிமாண்ட் மிகவும் அதிகமாக நிலவுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த விபத்து சம்பவத்தின் வாயிலாக ஸ்கார்பியோவும், ஹாரியர் கார் மாடலும் தாங்கள் உறுதியானவர்கள் என்பதை வெளிக்காட்டியிருக்கின்றன.
மேலும், இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இதன் வாயிலாக பயணிகளின் பாதுகாப்பிற்கு சிறந்த வாகனங்கள் இவை என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் ரூ. 13.85 லட்சம் தொடங்கி ரூ. 24.54 லட்சம் வரையிலான விலையிலும், டாடா ஹாரியர் ரூ. 14.99 லட்சம் தொடங்கி ரூ. 23.99 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் டாடாவும், மஹிந்திராவும் போட்டி போட்டுக் கொண்டு அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே இரு நிறுவனங்களின் தயாரிப்புகளும் விபத்தில் சிக்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









