மயிரிழையில் உயிர்தப்பிய முன்னாள் எம்.எல்.ஏ... மஹிந்திரா கார்களின் தரத்துக்கு இதைவிட ஒரு சாட்சி தேவையில்ல!!

அதிவேகத்தில் மோதலுக்கு உள்ளான போதும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் இருந்து, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட அனைத்து பயணிகளும் நலமுடன் மீட்கப்பட்டுள்ளனர். மஹிந்திரா தயாரிப்புகளின் தரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சாலை விபத்துகளில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளது. நம் நாட்டில் சாலைகளின் தரம் பல்வேறு பகுதிகளில் சற்று சுமாராக உள்ளதை மறுப்பதற்கு இல்லை. அதேநேரத்தில் வாகன ஓட்டிகளின் அதிவேக பயணமும் இதற்கு முக்கிய காரணமாகும். நகர்புற சாலைகளிலும், குறுகிய தொலைவிற்கும் மிதமான வேகத்தில் பயணித்தாலே போதும். ஆனால் நெடுஞ்சாலைகளில் அவ்வாறு பயணிக்க இயலாது, சிறிது கூடுதல் வேகத்துடனே செல்ல வேண்டியிருக்கும்.

மஹிந்திரா காரில் மயிரிழையில் உயிர்தப்பிய முன்னாள் எம்.எல்.ஏ!

இந்த கூடுதல் வேகத்தால் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்க முடிவதில்லை. இதனால் தினந்தோறும் நமது இந்தியாவில் நூற்றுக்கணக்கான விபத்துகள் நெடுஞ்சாலைகளிலும், தொலைத்தூர பயணத்திற்கான விரைவுச்சாலைகளிலும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் நகரத்திற்குள் நடைபெறும் சாலை விபத்துகளை காட்டிலும் நெடுஞ்சாலை விபத்துகள் குறைவுதான் என புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் என்.எச்-77 நெடுஞ்சாலையில் முன்னாள் மாநில சட்டமன்ற உறுப்பினர் உள்பட பயணிகளுடன் சென்ற மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் விபத்தில் சிக்கியுள்ளது. சம்பவத்தின்போது, இந்த ஸ்கார்பியோ-என் காருக்கு மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்தால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், இயங்கி கொண்டிருந்த சாலையில் இருந்து முற்றிலும் திரும்பி கார் அருகில் இருந்த டிவைடரில் மோதி உள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நெடுஞ்சாலையில் அதிவேகமாக இயங்கி கொண்டிருந்த இந்த ஸ்கார்பியோ-என் காருக்கு முன்பாக திடீரென பைக் ஒன்று வந்துள்ளது. அந்த சமயத்தில் பைக் ஓட்டுனர் மீது மோதக்கூடாது என்பதற்காக ஸ்கார்பியோ-என் காரின் டிரைவர் ஸ்டேரிங் சக்கரத்தை திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் அந்த இடத்தில் டிவைடர் இருந்துள்ளது. அதில் மோதி கார் நின்றுள்ளது.

அதிவேகத்தில் இயங்கி கொண்டிருந்த போது, திடீரென ஸ்டேரிங் சக்கரத்தை திரும்ப நேர்ந்தால், எந்தவொரு வாகனத்திலும் முற்றிலுமாக கண்ட்ரோல் கிடைக்காது. ஆதலால் இந்த சம்பவத்தில் கார் டிரைவரின் மீது எந்த தவறும் இருக்காது என்றே நினைக்கிறோம். இந்த விபத்தில் நாம் கவனிக்க வேண்டியது, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் வலிமை ஆகும். அவ்வளவு வேகத்தில் மோதிய போதும், காரில் இருந்த ஒரு பயணிக்கு கூட எந்த பலத்த காயமும் ஏற்படவில்லை.

மஹிந்திரா காரில் மயிரிழையில் உயிர்தப்பிய முன்னாள் எம்.எல்.ஏ!

இதற்கு நாம் மஹிந்திராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பல்வேறு நாட்டு கார்களை சோதனை செய்து மதிப்பெண்களை வழங்கும் க்ளோபல் என்சிஏபி அமைப்பு ஸ்கார்பியோ-என் காருக்கு முழு 5 நட்சத்திரங்களை வழங்கிய போதே, இந்த காரின் தரம் நமக்கு தெரிந்துவிட்டது. சமீபத்தில் பீகாரில் நடந்துள்ள இந்த விபத்து அதனை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. மற்றப்படி காரில் பயணித்த முன்னாள் எம்.எல்.ஏ பற்றிய விபரங்கள் கிடைக்க பெறவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

க்ளோபல் என்சிஏபி சோதனையில் முழு 5 ஸ்டார்களை பெற்ற காரின் உடல் வலிமை இந்த அளவிற்கு இல்லையென்றால், இந்த மதிப்பெண்களே அர்த்தம் இல்லாமல் போய்விடும். கார்களின் தரத்தை மக்கள் நேரடியாக இவ்வாறான விபத்துகள் மூலமாகவே தெரிந்துக் கொள்கின்றனர். நல்லவேளையாக, இந்த விபத்தில் எவரொவருக்கும் ஆபத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 16:34 [IST]
English summary
Mahindra scorpio n car crashed in bihar all passengers safe
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+