எவ்வளவு கனவோடு காரை வாங்கி இருப்பாரு!! லட்சம் ரூபாய்களில் வாங்கிய மஹிந்திரா கார் இதுக்கு தான் பயன்படுது!
வாங்கி 2 மாதங்கள் மட்டுமே ஆன மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஒன்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு, பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர் என்ன செய்தார் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
பொது விற்பனைக்கு வரும் எந்தவொரு வாகனமும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பிறகே விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கார்கள் உருவாக்கப்படும் போது அதீத கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில், பரவலாக அதிக மக்களால் வாங்கப்படுபவை என்பது மட்டுமின்றி, கார்களில் அதிக வேகத்தில் செல்ல முடியும் என்பதால்.

கார் ஒன்றின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான அனைத்து பாகங்களும் பயன்படுத்துவதற்கு முன் அதன் தரத்தை சோதனை செய்யப்படுகின்றன. அவ்வாறான பாகங்களை கொண்டு உருவாக்கிய பின்பும், அந்த கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, வாங்குவதற்கு முன் கஸ்டமர்களும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கின்றனர்.
இவ்வாறு ஒன்றுக்கு பலமுறை சோதனை செய்யப்பட்டாலும், விற்பனை செய்யப்படும் கார்களுள் சில குறுகிய காலத்திலேயே அடிக்கடி பிரச்சனைகளை சந்திப்பதை அவற்றின் வாடிக்கையாளர்கள் கூற இதற்குமுன் கேட்டிருக்கிறோம். அந்த வரிசையில், சுராஜ் தாக்கூர் என்பவர், அடிக்கடி பழுதாகிய தனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை மாட்டுத்தீவணங்களையும், மாட்டுச் சாணியையும் எடுத்து செல்ல மட்டும் பயன்படுத்துகிறார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், சுராஜ் தாக்கூரின் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் வாங்கி வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. புதியதாக வாங்கிய காரில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால், அதனை வாங்கிய கஸ்டமர்கள் கோபத்தில் காரை குப்பை வண்டியாகவும், கழுதை இழுக்கும் வண்டியாகவும் பயன்படுத்துவதை இதற்குமுன் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறோம்.
அவ்வாறு, சுராஜ் தாக்கூர் தனது காரை தான் வைத்திருக்கும் மாடுகளுக்கு பயன்படுத்துகிறார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சுராஜ் தாக்கூர் கூறியிருப்பதாவது, "காரை வாங்கிய முதல் 4 நாட்களிலேயே முதல் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. கிளட்ச் பிளேட்கள் சரியாக செயல்படவில்லை. அந்த சமயத்தில் காரை நான் வெறும் 475கிமீ மட்டுமே ஓட்டி இருந்தேன்.
அதன்பின், 1,785கிமீ தொலைவிற்கு கார் இயங்கி இருந்த சமயத்தில் ஸ்டேரிங் சக்கரத்தின் ரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின், 4,800கிமீ பயணத்திற்கு பிறகு காரின் டிஸ்க் பிரேக்கில் பழுது ஏற்பட்டது. இதனை சர்வீஸ் செண்டர் மூலமாக மாற்றினேன். 5,212கிமீ பயணத்திற்கு பிறகு, ஸ்கார்பியோ-என் கார் லிம்ப் மோடிற்கு சென்றுவிட்டது. அதாவது, மணிக்கு 40கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியவில்லை" என கூறியுள்ளார்.

இதில், லிம்ப் மோடானது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் வழங்கப்படும் ஒன்றாகும். இது, விபத்து ஏற்படும் அவசர காலத்தில் காரில் மேலும் வேறெந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, காரை 40kmph மேல் இயங்க அனுமதிக்காது. ஆனால், இந்த லிம்ப் மோடை கார் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சுராஜ் தாக்கூர் சந்தித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை வாங்கிய வெறும் 2 மாதங்களில் கிட்டத்தட்ட 5 பிரச்சனைகள் என்றால், மனம் வெறுத்து போய்விடும். ஏனெனில், ஸ்கார்பியோ-என் ஒன்றும் பட்ஜெட் விலை கார் கிடையாது. இதன் விலை சற்று அதிகமே. இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய காரில் அடிக்கடி பிரச்சனை எனும்போது, யாராக இருந்தாலும் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுவர்.


Click it and Unblock the Notifications









