புது காராக இருந்தாலும், ஃபேன்ஸி நம்பருக்கு இவ்வளவு செலவு செய்வதா!! ராஜஸ்தான் இளைஞரின் ஸ்கார்பியோ என் கார்!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் ( Mahindra Scorpio N) கார் உரிமையாளர் ஒருவர் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டிற்கு லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளார். யார் அந்த அறிவாளி? அப்படி என்ன ஃபேன்ஸி நம்பரை தனது ஸ்கார்பியோ என் காருக்கு வழங்கியுள்ளார் என்ற விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திராவின் சமீபத்திய வெற்றிக்கரமான கார்களுள் ஸ்கார்பியோ என் ஒன்றாகும். சந்தையில் பிரபலமான ஸ்கார்பியோ எஸ்யூவி மாடலின் அப்டேட் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை வெர்சனாக ஸ்கார்பியோ என் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நீங்கள் இந்த காரை முன்பதிவு செய்தாலும் உடனடியாக டெலிவிரி பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவே. பலரும் தேர்வு செய்யாத வேரியண்ட்டை தேர்வு செய்தால் உண்டு.

scorpio n owners fancy number plate

ஏனெனில் அந்த அளவிற்கு, ஸ்கார்பியோ என் காருக்கு கிடைத்தும் வரும் புக்கிங்களுக்கு ஏற்ப கார்களை தயாரிக்க முடியாமல் மஹிந்திரா போராடி வருகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை வாங்கியவர்களில் சிலர் தங்களது காரை தங்களது விருப்பத்திற்கு மாடிஃபை செய்தும் கொண்டுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவரை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மேலுள்ள படத்தில் நீங்கள் காண்பது, மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் இசட்4 வேரியண்ட் ஆகும். இசட்4 வேரியண்ட் ஆனது ஸ்கார்பியோ காரின் வேரியண்ட்கள் வரிசையில் மத்தியில் உள்ளது. இந்த செய்தியின் இறுதியில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் நபர் இந்த காரில் சில பல மாற்றங்களை செய்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், மற்ற கார்களை போன்று மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரையும் அதன் சில உரிமையாளர்கள் மாடிஃபை செய்துள்ளனர்.

scorpio n owners fancy number plate

ஆனால் இந்த குறிப்பிட்ட மாடிஃபைடு ஸ்கார்பியோ என் காரின் உரிமையாளர் சுமார் ரூ.7.5 லட்சம் செலவு செய்து தனது காரை மாடிஃபை செய்து கொண்டுள்ளார். இவரது ஸ்கார்பியோ என் இசட்4 காரில் டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய தேர்வுகளுடன் ஸ்கார்பியோ என் இசட்4 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.17.12 லட்சம் என்ற அளவில் உள்ளது. ஆன்ரோடு-விலை எப்படியிருந்தாலும் ரூ.20 லட்சத்தை தொட்டுவிடும்.

மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால், இந்த காருக்காக இதுவரையில் சுமார் ரூ.27 லட்சத்தை இந்த நபர் செலவு செய்துள்ளார். காரை மாடிஃபிகேஷன் செய்வதற்கு ரூ.7.5 லட்சம் செலவாகுமா என கேட்டால், ஆகும். ஆனால் வீடியோவில் காட்சித்தரும் காரில் ரூ.7.5 லட்சம் அளவிற்கு மாடிஃபிகேஷன் பணிகள் நடைபெற்றது போல் தெரியவில்லை. ஏனென்றால், இந்த நபர் ரூ.7.5 லட்சத்தில் பெரும்பான்மையான தொகையை ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்காக பயன்படுத்தி உள்ளார்.

scorpio n owners fancy number plate

எவ்வளவு என்றால், சுமார் ரூ.6 லட்சம். இவ்வளவு தொகையை "RSY 0017" என்ற ஃபேன்ஸி பதிவெண்ணிற்காக செலவு செய்துள்ளார். இவர் வசிக்கும் ராஜஸ்தானில் மாநிலத்தில் பதிவெண்கள் "RJ"-இல் இருந்து ஆரம்பிக்கும்படி எப்போதோ மாற்றப்பட்டுவிட்டன. ரூ.6 லட்சம் இதற்கே போக, ரூ.1 லட்சம் அலாய் சக்கரங்களுக்கும், அவற்றிற்கான டயர்களுக்கும் செலவாகி உள்ளது. வழக்கமாக ஸ்கார்பியோ என் காரில் 18-இன்ச் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் இதனை இந்த நபர் 20-இன்ச்சாக மாற்றியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு கார்களை மாடிஃபை செய்வோரின் முதல் கவனம் காரின் சக்கரங்களின் மீதுதான் உள்ளது. இதனை பல்வேறு மாடிஃபைடு கார்களில் பார்த்துள்ளோம். இதற்கு 1 லட்சம் என்றால் கூட ஏற்று கொள்ளாலாம், ஆனால் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டிற்காக ரூ.6 லட்சம் வரையில் செலவு செய்திருப்பது டூ மச். அதுசரி, உலகில் கோடி கணக்கில் செலவு செய்து ஃபேன்ஸி நம்பர்களை வாங்குவோர் இருக்கும்போது, இது லட்சம் தானே...

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 15:08 [IST]
English summary
Mahindra scorpio n car owners rs 6 lakh fancy number plate
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X