டிராக்டரை வாங்குவதற்கு பதில், இப்படி 4 ஸ்கார்பியோ கார்களை வாங்கி போடலாம்! விவசாயம் பார்த்த மாதிரியும் ஆச்சு...

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரில் ஏர் கலப்பையை கட்டி சிலர் விவசாய நிலத்தை ஏர் உழுது விவசாயம் பார்த்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ராகுல் ராவ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஒரு காலத்தில் மாடு கட்டி ஏர் உழுது விவசாயம் பார்த்தனர். இதற்காகவே ஒரு சில மாடு இனங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அறிந்திருப்பீர்கள். அதன்பின் மாடுகளுக்கு பதிலாக டிராக்டர்கள் வந்தன. டிராக்டர்களை பயன்படுத்துவதால், அந்த குறிப்பிட்ட சில மாடு இனங்கள் அழிவதாக சிலர் அந்த சமயத்தில் போர் கொடி தூக்கியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

scorpio-n car used for ploughs

ஆனால், இப்போது உலகம் மேலும் முன்னேறிவிட்டது. வெளிநாடுகளில் ஏர் உழுவதில் இருந்து பயிரிட்டு அறுவடை செய்வது வரையில் தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன. இருப்பினும், நம் இந்தியாவில் இன்னமும் பெரும்பாலான இடங்களில் பாரம்பரிய விவசாய முறையே பின்பற்றப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், வட இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் சிலர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் ஏர் உழுதிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில் இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், தனக்கு வழங்கப்பட்ட வழிக்காட்டுதலின்படி இந்த ஸ்கார்பியோ கார் டிரைவர் இன்றி தானாக இயங்கி ஏர் உழுதுள்ளது. இதற்காக, காரின் பின்பக்கத்தில் ஒன்றிற்கு இரண்டு ஏர் கலப்பைகள் காருடன் இணைக்கப்பட்டு இருப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

scorpio-n car used for ploughs

இந்த வீடியோவின் துவக்கத்தில், வெள்ளை நிறத்திலான மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் ஒன்று ஏர் உழுது கொண்டிருப்பது காட்டப்படுகிறது. அதன்பின், மொபைல் போனில் வீடியோவை காட்சிப்படுத்திய நபர் காருக்கு அருகே சென்று கதவை திறந்தால், காருக்கு உள்ளே யாருமே இல்லை. காரை வைத்து ஏர் உழுததை காட்டிலும், தானாக கார் ஏர் உழுதது தான் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இன்றைய கால கார்களில் அடாஸ் (ADAS) என்கிற அற்புதமான தொழிற்நுட்ப அம்சம் வழங்கப்படுகிறது. விபத்து ஏற்படும் அவசர காலங்களில் பயணிகளை காப்பாற்றும் விதமாக கார் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அடாஸ் பெரும் உதவியாக இருக்கிறது. இவ்வாறு, மீண்டும், மீண்டும் ஒரே குறிப்பிட்ட இடத்திற்குள் காரை சுற்ற வைப்பதற்கும் அடாஸை பயன்படுத்த முடியும். இதன் மூலமாகவே, ஹரியானாவில் நடந்துள்ள இந்த சம்பவத்தை சாத்தியமாக்கி உள்ளனர்.

scorpio-n car used for ploughs

ஹரியானாவில் இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளவர்கள், இதேபோன்று மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றுடன் விவசாய டிராக்டரை டக்-ஆஃப்-வார் செய்தும் வீடியோ வெளியிட்டுள்ளனர். டக்-ஆஃப்-வார் என்பது இரு வாகனங்களை கயிறு அல்லது கம்பியால் ஒன்றோடு ஒன்று இணைத்து, இரு வாகனங்களில் எது அதிக ஆற்றல்மிக்கது என்பதை சோதிப்பது ஆகும். மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் இளைஞர்கள் விளையாடுவார்களே அதேபோன்றுதான்.

வாகனங்களை வைத்து டக்-ஆஃப்-வார் நடத்துவது மிகவும் ஆபத்தானது என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் கூறியுள்ளோம். ஏனெனில், இந்த போட்டியினால் இரு வாகனங்களும் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. வாகனங்களின் என்ஜின் வரையில் கூட பாதிப்புகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வாகனங்களை இணைத்திருக்கும் கயிறு (அ) கம்பி அறுப்பட்டால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சேதாரங்கள் ஏற்படக்கூடும்.

scorpio-n car used for ploughs

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஹரியானாவில் உள்ள இந்த நபர்களிடம் இந்த வெள்ளை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் சிக்கி சின்னா பின்னமாகிறது. இருப்பினும், டிரைவர் உதவியின்றி காரை வைத்து ஏர் உழுதிருப்பது பாரட்டத்தக்க ஒன்றே. ஏனெனில், நம் இந்தியாவில் காரின் அடாஸ் வசதிகளை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் ஒப்பிட்டால் இந்த நபர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 23:59 [IST]
English summary
Mahindra scorpio n car ploughs farming field without driver check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X