3.25லட்ச ரூபா செலவில் ஸ்கார்பியோவை அலங்கரித்த உரிமையாளர்! இவ்ளோ தீவிரமான கார் காதலரா! வாய பிளக்கும் வாகன உலகம்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ஸ்கார்பியோ (Scorpio) இருக்கின்றது. இந்த கார் மாடல் இப்போது இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio N) ஆகிய இரு மாடல்களாகவே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், ஸ்கார்பியோ என் மாடலையே இந்தியர் ஒருவர் கூடுதல் சிறப்புமிக்க ஓர் வாகனமாக மாற்றி இருக்கின்றார். மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டான இசட்2-வையே அவர் உயர் நிலை தேர்வான இசட்8-க்கு இணையானதாகவே அப்கிரேட் செய்திருக்கின்றார்.

Mahindra scorpio n

இவ்வாறு செய்வதற்காக ரூ. 3.25 லட்சம் வரை அதன் உரிமையாளர் செலவு செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பெரும் தொகை செலவிலேயே காரின் உட்பக்கத்தை முழுமையாக அவர் அப்கிரேட் செய்திருக்கின்றார். ஆகையால், மிகவும் அழகிய உட்பக்கம் மற்றும் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக இந்த ஸ்கார்பியோ என் இசட்2 மாறி இருக்கின்றது.

கருப்பு-வெள்ளை தீமிலான அம்சங்களையே புதிதாக இந்த காரில் அதன் உரிமையாளர் சேர்த்திருக்கின்றார். ஆமாங்க, இருக்கை தொடங்கி ஸ்டியரிங் வீல் வைர என குறிப்பிட்ட முக்கிய பாகங்களுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற லெதரை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். முக்கியமாக டேஷ்போர்டு மற்றும் உட்பக்க பில்லர்களுக்கு வெள்ளை நிற லெதரை அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

Mahindra scorpio n steering wheel

இதுவே அந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்துவிட்டது. இத்துடன், இன்னும் சிறப்பு சேர்க்கும் விதமாக சில்வர் நிற அணிகலன்கள் காரின் உட்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், ஸ்டாக் திரையும் இந்த காரில் இருந்து மாற்றப்பட்டு டிஜிட்டல் வசதிகள் நிறைந்த திரை புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

இதனை கன்சோலின் மையப் பகுதி, டோரின் உட்பக்க கை பிடி உள்ளிட்டவற்றில் நம்மால் பார்க்க முடிகின்றது. இதேபோல், மியூசிக் சிஸ்டமும் புதிதாக இந்த கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. சோனி இஎஸ் சீரிஸ் மற்றும் கோ ஆக்ஸியல் சவுண்ட் சிஸ்டமே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Mahindra scorpio n rear seat

இதுதவிர, ஜேபிஎல் 1300 வாட் சப் ஊஃபர் மற்றும் பயனீர் ஆம்பிளிஃபையர் ஆகியவையே இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் இன்னும் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், காரை அலங்கரிக்கும் விதமாக குரோம் ஸ்லேட் அமைப்புக் கொண்ட கிரில், எல்இடி லைட்டுகள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக இதன் வீல்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன. 18 அங்குல டைமண்ட் அலாய் வீல்களே புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களை அவர் பெரும் பொருட் செலவில் சேர்த்திருக்கின்றார். குறிப்பாக, பெயிண்டை பாதுகாக்க அவர் பாதுகாக்கும் ஃபிலிமை சேர்த்து இருக்கின்றார்.

Mahindra scorpio n door

அதற்காக மட்டுமே அவர் 60 ஆயிரம் ரூபாய் செலவழித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா ஸ்கார்பிய என் இசட்2-வின் விலை ரூ. 13.76 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால், இந்த காரின் உரிமையாளர் ஆன்-ரோடில் ரூ. 16 லட்சம் செலவு செய்து வாங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள கார் ஆர்வலர்கள் பலர் விலை குறைவான கார்களை வாங்கி அதில், உயர்நிலை காராக மாற்ற வெளிச்சந்தையை அணுகுகின்றனர். இதன் வாயிலாக குறைவான செலவில் மிக உயரிய விலைக் கொண்ட காராக மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 21:45 [IST]
English summary
Mahindra scorpio n modified into high end varient
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X