புது கார் வாங்கிய சந்தோஷத்தில் குடும்பம் செய்த காரியம்! உற்சாகம் அதிகம் ஆயிட்டா இப்படிதான் நடக்கும்!
சொந்தமாக ஒரு கார் (Car) வாங்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க குடும்பங்களின் வாழ்நாள் கனவு. எனவே பல தடைகளை தாண்டி சொந்த காரை வாங்கும்போது, மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. டெலிவரி (Delivery) எடுக்கும்போது, அவர்களின் முகத்தை பார்த்தாலே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த சூழலில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரை டெலிவரி எடுத்தபோது, ஒரு குடும்பம் செய்த விஷயங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. மனீஷ் ராஜ் சிங்கானியா என்பவர், சமீபத்தில் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இவர் ராலாஸ் மஹிந்திரா என்ற மஹிந்திரா டீலர்ஷிப்பின் உரிமையாளர் ஆவார்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் இந்த மஹிந்திரா டீலர்ஷிப் இயங்கி வருகிறது. இங்கு தினநாத் சாகு என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்தார். திருமணம் முடிந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, அவர் இந்த காரை வாங்கியுள்ளார்.
டீலர்ஷிப்பில் இருந்து புதிய காரை டெலிவரி எடுப்பதற்காக தினநாத் சாகுவின் குடும்பமே வந்திருந்தது. பொதுவாக கார் டெலிவரி நிகழ்ச்சிகளின்போது, கேக் வெட்டுதல் போன்ற கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் தினநாத் சாகு குடும்பத்தினர், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்தபோது நடனமாடி கொண்டாடினர்.
இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து டீலர்ஷிப் உரிமையாளரான மனீஷ் ராஜ் சிங்கானியா ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பின்வருமாறு: கடந்த 23 ஆண்டுகளில் நான் பார்த்த கார் டெலிவரிகளிலேயே, இதைதான் நான் மிகவும் விரும்புகிறேன்.
எங்கள் வாடிக்கையாளர்களின் கனவுகளை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கார் வாங்குவதே பெரிய சந்தோஷம்தான். அதிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் கைக்கு கிடைப்பது என்பதெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஆகும். ஏனெனில் இந்த காருக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது.
எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் (Waiting Period) இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்த காரை டெலிவரி பெற வேண்டுமென்றால், முன்பதிவு செய்த நாளில் இருந்து நீங்கள் 1 வருடத்திற்கும் அதிகமான காலம் காத்திருக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலர் இந்த காருக்காக தவம் இருந்து வரும் நிலையில், ஒரு வழியாக டெலிவரி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கூட, தினநாத் சாகுவின் குடும்பத்தினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் ஆரம்ப விலை (Price) 13.05 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.52 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவேதான் வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையிலேயே தினநாத் சாகு குடும்பத்தினர் காரை டெலிவரி பெறும்போது நடனமாடுவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாமே சொந்தமாக கார் வாங்கியதை போன்ற உணர்வை இந்த வீடியோ ஏற்படுத்துகிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில், தினநாத் சாகு குடும்பத்தினரின் பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications