கடவுள் போல் காப்பாற்றிய மஹிந்திரா கார்!! உள்ளே இருந்தவர்களுக்கு மறு ஜென்மம்... உ.பி-இல் நடந்த விபத்து!
மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார் ஒன்று சாலையில் இருந்து விலகி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போதிலும் உள்ளே இருந்த அனைத்து பயணிகளையும் காப்பாற்றி உள்ளது. மஹிந்திரா கார்களின் தரத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அளவில் பெரிய நாடு என்பதினாலேயே நம் இந்தியாவில் தினந்தோறும் சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகின்றன. உலகிலேயே பெரிய சாலை கட்டமைப்பை கொண்ட நாடாக இருப்பதினால், நம் நாட்டில் சாலை விபத்துகளை தடுப்பது பெரிய சவாலாக உள்ளது. எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, முடியாத காரியம்.

இதன் காரணமாகவே, கார் நிறுவனங்களை நன்கு வலிமையான கார்களை உருவாக்கும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களிலும் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, தற்சமயம் உற்பத்தி செய்யப்படும் கார்கள் சென்சார்கள், ரேடார்கள் போன்றவற்றின் மூலமாக மிகவும் பாதுகாப்பானவையாக விளங்குகின்றன.
குறிப்பாக, டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளன. அவ்வாறு, க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை அள்ளிய மஹிந்திரா கார், ஸ்கார்பியோ-என் ஆகும். தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ-என் விளங்குகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உடல் வலிமையை பறைச்சாற்றும் வகையில் ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பஸ்தி என்கிற பகுதிக்கு இரவு 10:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி, 10- 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதில் கார் தலைக்கீழாக புரண்டு கீழே விழுந்துள்ளது. சம்பவத்தின்போது காரினுள் டிரைவர் உடன் சேர்த்து 7 பேர் இருந்துள்ளனர். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 7 பேரும் ஸ்கார்பியோ-என் காரில் அவர்களது உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் திரும்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

நல்லவேளையாக காரில் இருந்த எவரொருவருக்கும் பெரியதாக எந்த காயமும் ஏற்படவில்லை. கார் ரோல்ஓவர் ஆனதில் ஒரேயொருவருக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 பேருக்கு சிறு, சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு சிறு காயம் கூட இல்லை. இவ்வாறு கார் ரோல்ஓவர் ஆகும்போது, காரின் மேற்கூரை மற்றும் அதனை தாங்கி நிற்கும் பில்லர்கள் தான் அதிக சேதத்தை சந்திக்கும்.
பில்லர்கள் மடங்கிவிட்டால், காருக்குள் இருப்பவர்கள் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆனால், இந்த விஷயத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் வலிமையானதாக உள்ளது. இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று காரை ஓட்டிய டிரைவருக்கே தெரியவில்லை. இரவு நேரத்தில் சென்றதால், போதிய வெளிச்சமின்மையால் இந்த விபத்து நடந்திருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் விபத்துகளிலேயே மோசமானதாக ரோல்ஓவரை சொல்லலாம். அதாவது, சினிமா படங்களில் காட்டப்படுவது போன்று கார் 2, 3 முறை பல்டி அடித்து செல்லும். இவ்வாறான விபத்துகளில், உள்ளே இருக்கும் பயணிகளை காரே தனது ரூஃப் மூலமாக அழுத்தும். இந்த விபத்துகளில் கழுத்து எழும்பு உடைப்பட்டு, சம்பந்தப்பட்டவர் உயிரிழப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆனால், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் பயணிகள் அனைவரது உயிரையும் காப்பாற்றி இருப்பது ஆச்சிரியத்தையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









