பல லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்... வீடியோவை பாக்கும்போதே ஒடம்பெல்லாம் ஒதறது...

இந்தியாவில் புதிய கார்களை (New Cars) வாங்குபவர்கள், சமீப காலமாக வித்தியாசமான பிரச்னை ஒன்றை சந்தித்து வருகின்றனர். கார்களை டெலிவரி (Delivery) எடுக்கும்போது விபத்து (Accident) ஏற்படுவதுதான் அந்த பிரச்னை. இந்தியாவில் புதிய கார்களை டெலிவரி எடுப்பதற்கு சற்று முன்பும், டெலிவரி எடுத்த உடனேயும் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள 2 சம்பவங்களில் 3 கார்கள் சேதம் அடைந்துள்ளன. முதலில் 2 மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார்கள் விபத்தில் சிக்கிய நிகழ்வை பார்த்து விடலாம். சம்பவத்தன்று மஹிந்திரா டீலர்ஷிப் ஒன்று, 2 ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரி செய்ய வேண்டியிருந்தது.

Tata Nexon Accident During Delivery

எனவே டீலர்ஷிப் ஊழியர்கள் 2 கார்களையும், ஸ்டாக்யார்டில் (Stockyard) இருந்து, ஷோரூமுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதன் காரணமாக பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார், அதன் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரி எடுக்கலாம் என காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும். இங்கே டெலிவரிக்கு சற்று முன்பாக விபத்து என்றால், மற்றொரு சம்பவத்தில் டெலிவரி எடுத்த உடனேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

Mahindra Scorpio N, Tata Nexon Accident During Delivery

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டது டாடா நெக்ஸான் (Tata Nexon). சம்பவத்தன்று புதிதாக டெலிவரி எடுக்கப்பட்ட டாடா நெக்ஸான் கார் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஃபோர்ஸ் க்ரூஸர் (Force Cruiser) வாகனத்தின் பின் பகுதியில், டாடா நெக்ஸான் கார் மோதியது.

இந்த ஃபோர்ஸ் க்ரூஸர் வாகனத்தில் புல் பார் பொருத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக டாடா நெக்ஸான் காரின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டாடா நெக்ஸான் காருக்கு உள்ளே இருந்த பயணிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பி விட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதல் சம்பவத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டிய 2 பேரும், தாறுமாறாக வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம். 2வது சம்பவத்தில் ஃபோர்ஸ் க்ரூஸர் வாகனத்தின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்த காரணத்தால், பின்னால் வந்த டாடா நெக்ஸான் மோதியதாக கூறப்படுகிறது.

வாகனத்தில் சாலைக்கு வந்து விட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த 2 சம்பவங்களும் உணர்த்துகின்றன. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. இந்தியாவில் வாகனங்களில் புல் பார்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஃபோர்ஸ் க்ரூஸர் வாகனத்தின் உரிமையாளர், புல் பாரை பயன்படுத்தியுள்ளார்.

வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, பாதசாரிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால்தான் புல் பார்களை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே உங்கள் வாகனங்களில் புல் பார்கள் இருந்தால், உடனடியாக அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 14:12 [IST]
English summary
Mahindra scorpio n tata nexon accident during delivery viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+