3வது மாடியில் பார்க் செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்! வைரலாகும் செம வீடியோ!
ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பார்க் செய்யப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த கார் எப்படி மூன்றாவது மாடிக்கு சென்றது? எதற்காக இந்த கார் அங்கு இருக்கிறது என்ற கேள்வி பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
மிடில் கிளாஸில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்நாள் கனவு என்பது சொந்தமாக ஒரு வீடு வாங்குவது மற்றும் ஒரு கார் வாங்குவது தான் தனது ஒவ்வொரு உழைப்பையும் தனது ஒவ்வொரு வருமானத்தையும் இதற்காக மட்டுமே சேமித்து வைத்து ஒரு மனிதன் செலவு செய்கிறான். இப்படியாக அவன் கட்டும் வீட்டில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து ரசனையுடன் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வாகன விரும்பிகள் பலர் தங்கள் வீடு கட்டும்போது தங்களுக்கு விருப்பமான வாகனங்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்திருப்பார்கள் அல்லது வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனத்தை குறிக்கும் விதமாக ஏதாவது ஒரு அம்சத்தை வைத்திருப்பார்கள். இது பல நேரங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக கூட அமைந்திருக்கும்.
சமீபத்தில் இப்படியாகத்தான் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் வீட்டில் மூன்றாவது மாடியில் ஒரு ஸ்கார்பியோ கார் நிற்பது போன்று இருக்கிறது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. எப்படி ஒரு கார் அவ்வளவு உயரத்திற்கு சென்று நிறுத்தப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி ஆச்சரியத்துடன் பார்த்து வந்தார்கள்.

அந்த வீடியோவை நான் வீடியோவை நான் நன்றாக பார்க்கும்போது தான் தெரிகிறது. இந்த கார் உண்மையான ஸ்கார்பியோ கார் கிடையாது அந்த வீட்டின் உரிமையாளர் ஸ்கார்பியோ கார் மீது அதிக ஆர்வத்துடன் இருந்ததால் தனது வீட்டில் மொட்டை மாடியில் வடிவமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை இப்படியாக ஸ்கார்பியோ கார் போல வடிவமைத்துள்ளார்.
இதை பார்க்கும்போது நமக்கு வீட்டில் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ கார் நிற்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகிறார்கள். முக்கியமாக ஸ்கார்பியோ ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ பிரபலமாகி வருகிறது.

வீட்டில் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்கு பதிலாக ஸ்கார்பியோ காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டேங்க் இருக்கிறது. இதன் முன் பகுதியில் உள்ள கிரில் பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குரோம் பினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோவும் இதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த காரின் முன் பகுதியை தத்ரூபமாக மாற்றும் வகையில் முன்பக்கம் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட் வடிவமைப்பு புதிய அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள் புதிய ஃபாக் லைட்டுகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் நுணுக்கமான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிரில் பகுதிக்கு உட்பகுதியில் ஹெக்ஸாகோனல் இன்செர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்கார்பியோ என் காரை பொறுத்தவரை இதில் தார் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களில் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் எம் ஸ்டாலின் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் 4 எம் ஹாக் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வீடு என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் சாதனையாக பார்க்கப்படுகிறது. இப்படியான ஒரு இடத்தில் அவர் மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு அழைத்துள்ள முக்கியத்துவம் பலரை ஆசிரியப்பட வைத்துள்ளது. எந்த அளவுக்கு இவர் அந்த காரை விரும்புகிறார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது. நிச்சயம் இது தனித்துவமான ஒரு வடிவமைப்பு தான்.


Click it and Unblock the Notifications









