போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

போலீஸ் உதவி கமிஷனர் என கூறிய நபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பலரின் உயிரை பறித்து விட்டது. எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் பலர் தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வந்து கொண்டுள்ளனர்.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

எனவே ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பலரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஐதராபாத் நகரிலும் காவல் துறையினர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

அவர் தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என பொய்யாக கூறியுள்ளார். எனவே காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தன்று காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றை காவல் துறையினர் நிறுத்தினர்.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

அதன் உள்ளே இருந்த நபர் தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என கூறினார். அத்துடன் அடையாள அட்டையையும் காண்பித்தார். ஆனால் இது போலியான அடையாள அட்டை என்பதை அங்கு இருந்த மூத்த அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து விட்டார். பின்னர் காருக்குள் இருந்த நபரை வெளியே வரும்படி அவர் கூறினார்.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

வெளியே வந்த அந்த நபர், தான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும், இந்த அடையாள அட்டை தன்னுடைய தந்தையுடையது எனவும் மழுப்பலாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது பர்ஸை சோதனையிட்டனர். அப்போது பல்வேறு துறைகளின் போலியான அடையாள அட்டைகள் அதில் இருந்தன.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

இதன் காரணமாக அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து டிவி 31 நியூஸ் நெட்வொர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...

மிகவும் விலை உயர்ந்த கார்கள் மீதும் கூட காவல் துறையினர் பாகுபாடு காட்டுவதில்லை. அவற்றையும் அதிரடியாக பறிமுதல் செய்து விடுகின்றனர். இதற்கிடையே பெங்களூர் நகரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. எனவே 10 ஆயிரம் வாகனங்களை விடுவிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அபராதம் விதித்து விட்டு வாகனங்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மற்ற வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைக்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் அனைவரும் முறையாக கடைபிடிப்பது மிகவும் அவசியமானது. எனவே தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்லாதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Scorpio SUV Seized: Owner Arrested-Here Is The Reason Why. Read in Tamil
Story first published: Saturday, May 29, 2021, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X