சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் மூத்த துணை தலைவராக (Senior Vice President) பதவி வகித்து வருபவர் வேலுசாமி (Velusamy). இவர் வாகன தயாரிப்பு மேம்பாடு பிரிவின் தலைவராகவும் (Head of Automotive Product Development) இருக்கிறார். இந்த சூழலில் புதிய கார் ஒன்றை வேலுசாமி தற்போது வாங்கியுள்ளார்.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரைதான் வேலுசாமி தற்போது வாங்கியுள்ளார். மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள மற்றொரு எஸ்யூவி ரக கார்தான் எக்ஸ்யூவி700.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மிட்நைட் பிளாக் (Midnight Black) வண்ணத்தில் வேலுசாமி எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். ஆனால் அவர் என்ன வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? எந்த இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி எடுக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

இந்த புகைப்படத்தில் வேலுசாமியின் குடும்பத்தினரையும் நம்மால் காண முடிகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை 13.18 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.58 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

இது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் புதிய விலைகள் ஆகும். வெகு சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் விலைகளை உயர்த்தியது. அதற்கு பிறகு தற்போது இந்த விலையில்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனையாகி கொண்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுமே வழங்கப்படுகின்றன.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு இன்ஜின்களுமே மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடியவை. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம். அப்போது இந்த கார் எங்களை பல்வேறு விதங்களில் ஆச்சரியப்படுத்தியது.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மிகவும் பிரீமியமாக இருக்கிறது. இந்த விலைக்கு இதனை மிகச்சிறப்பான கார் என பலரும் வரையறுக்கின்றனர். இதன் காரணமாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு, எக்ஸ்யூவி700 கார்களை விரைவாக டெலிவரி செய்ய முடியாமல் மஹிந்திரா நிறுவனம் திகைத்து போயுள்ளது.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

அந்த அளவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் காத்திருப்பு காலமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையும், மஹிந்திரா நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அனைத்து பிரச்னைகளையும் சமாளித்து வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை விரைவாக எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மஹிந்திரா நிறுவனம் எடுத்து வருகிறது.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) போன்ற கார்களுக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக, தனது போட்டி கார்கள் அனைத்திற்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 விற்பனையில் மிக கடுமையான சவாலை வழங்கி வருகிறது.

சூப்பரான சாய்ஸ்... எக்ஸ்யூவி700 காரை வாங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் உயரதிகாரி... இவரை யார்னு தெரியிதா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி பெறுவதற்காக இன்னும் நிறைய பேர் முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டுள்ளனர். எனவே வரும் மாதங்களிலும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மிக சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக மிக பிரபலமான ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2022, 14:28 [IST]
English summary
Mahindra senior vice president buys a xuv700 suv details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+