பெண் ஒருவர் ஓட்டியும் வாகனம் எப்படி கவிழ்ந்தது? பார்த்தவர்கள் கூறும் பரபரப்பு சம்பவங்கள்!!
என்னதான் நெடுஞ்சாலைகளிலும், கரடு முரடான சாலைகளிலும் வாகனங்களை ஓட்டி இருந்தாலும், கடற்கரை மணலில் அலைகளுக்கு அருகே குளிர்ந்த காற்றில் வாகனம் ஓட்டுவது எப்போதுமே தனி சுகம்தான். ஆனால், அதேநேரம், அவ்வாறு கடற்கரை மணலில் வாகனம் ஓட்டும்போதுதான் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கடற்கரை மணலில் சிக்கிக் கொண்ட வாகனங்களை பற்றி இதற்குமுன் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் கேரளாவில் நடைபெற்றுள்ள மற்றுமொரு நிகழ்வை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
கடற்கரை மணலில் வாகனம் ஓட்டுவது நீங்கள் நினைப்பது போன்று அவ்வளவு ஒன்றும் எளிதானது கிடையாது. இதனால்தான் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நிறைய கடற்கரை மணலில் வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளது. அப்படியென்றால், சில கடற்கரை பகுதிகளில் அனுமதி உள்ளதா? என நீங்கள் கேட்கலாம்... ஆம் உள்ளது. ஆனால், அவை மிகவும் சில கடற்கரை பகுதிகளில் மட்டுமே.

அதாவது, அந்த கடற்கரை மணலில் அதிக அடர்த்தி இருக்க வேண்டும் என சில புவியியல் சார்ந்த விஷயங்கள் இதில் உட்படுகின்றன. இந்தியாவில் கேரளாவின் முழப்பிலங்காடு கடற்கரை மணலில் வாகனங்களை இயக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆசியாவிலேயே வாகனங்களை ஓட்ட அனுமதி உள்ள நீளமான கடற்கரை இதுவாகும். இந்தியாவிலேயே இவ்வாறான கடற்கரை பகுதி இது மட்டுமே ஆகும்.
இதன் காரணமாகவே இந்த பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடலை நோக்கி வந்து செல்வதை பார்க்க முடியும். அந்த வகையில், சமீபத்தில் மஹிந்திரா தார் வாகனத்தில் முழப்பிலாங்காடு கடற்கரைக்கு சென்ற இருவர் அதிவேகமாக ஓட்டி தங்களது மஹிந்திரா தார் வாகனத்தை கடற்கரையில் ஒருபக்கமாக கவிழ்த்துள்ளனர்.

என்னதான் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி உள்ள கடற்கரை பகுதியாக இருப்பினும், அதிவேகமாக பயணிப்பது ஆபத்தானது ஆகும். அதை தான் இந்த மஹிந்திரா தார் வாகன ஓட்டி செய்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இந்த வாகனம் மிகவும் அதிவேகமாக வந்ததாக தெரிவித்துள்ளனர். அதிவேகமாக திருப்ப முயற்சித்த போது இந்த வாகனம் கவிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கேற்றவாறு கடற்கரை பகுதிகளில் பலமான காற்று வீசுகிறது. இதைவிட கடற்கரை மணலில் அதிவேகமாக வாகனம் ஓட்ட கூடாது என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம், கடற்கரை மணல்கள் குறைவான டிராக்ஷன் கண்ட்ரோலை கொண்டவைகளாக உள்ளன. மேலும், இதற்கு ஏற்றவாறு கடற்கரை மணலில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இது எந்தவொரு வாகனத்தையும் அதிவேகமாக செல்லும்போது கவிழ்க்கும் திறன் கொண்டது.
அத்தகைய சமயத்தில் மிகவும் திறன்மிக்க டிரைவர்கள் கூட கண்ட்ரோலை இழப்பதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வாகனத்தின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளிவருவதை காணலாம். சம்பவத்தின்போது இந்த மஹிந்திரா தாரை ஓட்டியது ஒரு பெண் என கூறப்படுகிறது. நல்லவேளையாக இதில் எவரொருவருக்கும் காயமில்லை.
கவிழ்ந்து கிடந்த வாகனத்தை மீட்க பலர் உதவினாலும் மக்களால் வாகனத்தை மீட்க முடியவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் கிரேன் உதவியுடன் மஹிந்திரா தாரை கடற்கரையில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளனர். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மஹிந்திரா தாருக்கு சிறிய சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா தார் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த உதாரணம் ஆகும். குறிப்பாக, கடல் அலைகளுக்கு அருகே வாகனம் ஓட்டும்போது இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனால்தான், கேரளாவின் முழப்பிலாகாடு கடற்கரையை தவிர்த்து மற்ற அனைத்து கடற்கரை பகுதிகளிலும் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








